/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/நகராட்சி கடையை ரூ.45 லட்சத்துக்கு விற்றதாக புகார் :ஆதாரமில்லை என தலைவர் அமைதிநகராட்சி கடையை ரூ.45 லட்சத்துக்கு விற்றதாக புகார் :ஆதாரமில்லை என தலைவர் அமைதி
நகராட்சி கடையை ரூ.45 லட்சத்துக்கு விற்றதாக புகார் :ஆதாரமில்லை என தலைவர் அமைதி
நகராட்சி கடையை ரூ.45 லட்சத்துக்கு விற்றதாக புகார் :ஆதாரமில்லை என தலைவர் அமைதி
நகராட்சி கடையை ரூ.45 லட்சத்துக்கு விற்றதாக புகார் :ஆதாரமில்லை என தலைவர் அமைதி
ADDED : ஜூலை 29, 2011 11:14 PM
குன்னூர் : 'குன்னூரில் நகராட்சி கடையை 45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்ற புகாருக்கு விளக்கமளிக்க வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டது.
குன்னூர் நகராட்சி கூட்டம் அதன் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. கூட்டத்தில் நடந்த விவாதங்கள்; முபாரக்: நகராட்சி குப்பைக் குழியில் குவியும் குப்பைகளை சேகரித்து உரம் தயாரித்து விற்கும் குத்தகை தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது; குப்பைகளை கொண்டு இதுவரை 300 டன் உரம் தயாரித்து, விற்றுள்ளனர்; 100 டன் உரம் தயாரிக்கப்பட்டுள்ளது. நகராட்சிக்கு செலுத்த வேண்டிய தொகையை அவர்கள் முறைப்படி செலுத்துவதில்லை. கமிஷனர் சண்முகம்: மூன்று மாதத்துக்கு ஒரு முறை தொகை யை செலுத்துகின்றனர். ஜெயராமன்: நகராட்சியில் 7 நாளுக்கு ஒரு முறை நீர் வினியோகம் செய்வதால், மக்கள் பாதிக்கின்றனர். லாரி மூலம் சீராக நீர் வினியோகம் செய்வதில்லை. தலைவர்: நீராதாரங்களில் நீர் மட்டம் குறைந்துள்ளது. விரைவில் சீரான நீர் வினியோகம் செய்யப்படும். லாரி மூலம் தடையின்றி நீர் வினியோகம் செய்யப்படுகிறது. சேகர்: தனியார் மூலம் மேற்கொள்ளப்படும் சுகாதாரப் பணியில் திருப்தியில்லை; குறைந்தளவு துப்புரவு பணியாளர்களே பணிபுரிகின்றனர். இதே குற்றச்சாட்டை கவுன்சிலர்கள் மணிகண்டன், ஜெயராமன் உட்பட சிலர் முன்வைத்தனர். செல்வம்: குன்னூர் நகராட்சி கடை ஒன்று 45 லட்சம் ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது என்ற புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கமளிக்க வேண்டும். தலைவர்: ஆதாரம் இல்லாமல் குற்றம் சாட்டக்கூடாது. மணி: சுற்றுலாப் பயணிகள் வந்து செல்லும், பெரும் செல்வந்தர்கள் வசிக்கும் சிங்காரா பகுதியில் 4 கோடி ரூபாய் சாலை அமைக்கப்பட்டுள்ளது; இதனால், நகர மக்களுக்கு எவ்வித பலனும் இல்லை. தலைவர்: குன்னூர் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளின் நலன் காப்பதும் நம் கடமை. பழனிச்சாமி: சிங்காரா பகுதி எனது வார்டுக்குட்பட்டது; பிற கவுன்சிலர்கள் கவலைப்பட வேண்டாம். இதனால், மணிக்கும், பழனிச் சாமிக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.