Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/புரட்டாசி மாத பிறப்பால் மீன் விலை கடும் சரிவு

புரட்டாசி மாத பிறப்பால் மீன் விலை கடும் சரிவு

புரட்டாசி மாத பிறப்பால் மீன் விலை கடும் சரிவு

புரட்டாசி மாத பிறப்பால் மீன் விலை கடும் சரிவு

ADDED : செப் 19, 2011 01:15 AM


Google News
ஈரோடு:ஈரோட்டில் புரட்டாசி மாதப்பிறப்பால், மார்க்கொட்டுக்கு மீன் வாங்குவோர் குறைந்ததால், கடந்த வாரம் 450 ரூபாய்க்கு விற்ற வஞ்சிர மீன், நேற்று கிலோ 250க்கு விற்றது.ஈரோடு மாநகரில் காவிரி கரை (பள்ளிபாளையம்), கருங்கல்பாளையம் காமராஜர் மகளிர் மேல் நிலைப்பள்ளி அருகில், ஸ்டோனி பிரிட்ஜ் மீன் மார்க்கெட் பகுதியில் மீன் விற்பனை செய்யப்படுகிறது. கோவை, மேட்டூர், பவானிசாகரில் இருந்து அணை, ஆற்றில் பிடிக்கப்படும் மீன்களும், ஆந்திரா மாநிலம் மற்றும் வைராபாளையம், கிருஷ்ணம்பாளையம் பகுதி பண்ணையில் இருந்து மீன்களும் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.தினமும் இரண்டு டன் மீன்கள், கோழி, ஆட்டுக்கறியும், விலை குறைவு மற்றும் பண்டிகை, திருவிழா காலங்களில் 5 டன் வரை மீன் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் கட்லா கிலோ 90 ரூபாய், ரோகு கிலோ 85க்கும், ஜிலேபி கெண்ட மீன் கிலோ 80 ரூபாய், கடல் வஞ்சிரம் 500 ரூபாய், லோக்கல் வஞ்சிரம் 200 ரூபாய், கிளங்கா கிலோ 90, கெழுத்தி 110க்கும், டேம் மீன் 85 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.புரட்டாசி மாதம் நேற்று துவங்கியதால், ஆடு, கோழி, மீன் கடைகளில், வாங்க யாரும் வராததால் வெறிச்சோடி காணப்பட்டது.

ஆனாலும் மார்க்கெட்டுக்கு வரத்து குறையவில்லை. விற்பனை நோக்கில், வியாபாரிகள் விலையை குறைத்த போதிலும் வாங்க யாருமில்லை.கருங்கல்பாளையம் மீன் மார்க்கெட் வியாபாரி மாரப்பன் கூறுகையில், ''ஆந்திரா, கர்நாடகா மாநில பண்ணைகளில் இருந்தும், மேட்டூர், பவானி அணையில் பிடிக்கப்படும் மீன்களே ஈரோட்டில் அதிகம் விற்பனையாகிறது. ரம்ஜான் பண்டிகையின்போது, 9 டன் மீன்கள் வரை விற்பனையானது. நேற்று 2 டன் மீன் விற்பது கடினமாக இருந்தது. விற்றாகவேண்டிய சூழ்நிலையால், கட்லா, ரோகு, டேம்மீன், கெழுத்தி மீன்கள் கிலோ 65 ரூபாய்க்கும், கிழங்கா, ஜிலேபி மீன்கள் கிலோ 55 ரூபாய்க்கும், கடந்த வாரம் 500க்கு விற்ற கடல் வஞ்சிரம் 250க்கும், 200க்கு விற்ற லோக்கல் வஞ்சிரம் 90 ரூபாய்க்கும் வியாபாரிகளே விலையை குறைத்து விற்றனர். ஆனாலும் வியாபாரம் ஆகவில்லை. எங்களுக்கு மொத்தமாக கொண்டு வந்து, முதல் வாரம் இறக்கப்படும் மீன்களுக்கு, மறுவாரம் வரும்போது, பண்ணையாளர்களுக்கு பணம் கொடுக்கவேண்டும். எனவே, கிடைத்த விலைக்கு விற்றோம். இனி வரும் வாரங்களில் வரத்தை குறைத்துக்கொள்வோம்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us