Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மக்களை பயமுறுத்திய அம்மன் "நோட்டீஸ்'

மக்களை பயமுறுத்திய அம்மன் "நோட்டீஸ்'

மக்களை பயமுறுத்திய அம்மன் "நோட்டீஸ்'

மக்களை பயமுறுத்திய அம்மன் "நோட்டீஸ்'

ADDED : ஜூலை 26, 2011 01:39 AM


Google News

ஈரோடு: ஈரோடு திண்டல் முருகன் கோவிலில், சிலர் விநியோகித்த நோட்டீஸால், பக்தர்கள் வேதனைக்குள்ளாகினர்.

ஈரோடு திண்டல் மலை முருகன் கோவிலில் நேற்று, ஆடி கிருத்திகை பெருவிழா கொண்டாடப்பட்டது.

முருகனை தரிசிக்க, நூற்றுக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். கோவில் நுழைவு வாயிலில் சிலர், அவசர, அவசரமாக நோட்டீஸ் வழங்கினர். ஆன்மீக நோட்டிஸ் என்ற நினைப்பில் வாங்கி படித்த பக்தர்களுக்கு, அதில் அச்சிடப்பட்ட வாசகங்கள் வேதனையை ஏற்படுத்தியது. 'பொள்ளாச்சி ஆனை மலை ஸ்ரீ மாசாணி அம்மனின் மகிமை' என்ற தலைப்பில் வழங்கப்பட்ட நோட்டீஸில், 'இந்த நோட்டீஸைப் போல் ஆயிரம் நோட்டீஸ் அச்சிட்டு, விநியோகித்தால், லாட்டரியில் பணம், தங்கப்புதையல் கிடைக்கும். அல்லது மரணம் சம்பவிக்கும்' என்ற கருத்தில் வாசகங்கள் இருந்தன. இதைப் படித்த பக்தர்கள் பலரும் அதிர்ச்சியில் உறைந்து போயினர். சிவாச்சாரியார் ஒருவர் கூறுகையில், 'தன்னை பிரபலப்படுத்தவில்லை என்றால் நஷ்டம் தருவேன் என, எந்தக் கடவுளும் கூறியதில்லை' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us