ADDED : ஜூலை 20, 2011 10:46 AM
மதுரை: மதுரை நேதாஜிரோடு டி.எம்.ஆர்., பள்ளியில் கண்ணதாசன் நற்பணி மன்றம் சார்பில் இலவச நோட்டு வழங்கும் விழா நடந்தது.
மன்ற தலைவர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். செயலாளர் சந்திரன் வரவேற்றார். கார்த்திகேயன் முன்னிலை வகித்தார். ஜேசீஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் நடராஜன் நோட்டு, எழுதுபொருளை வழங்கினார். தலைமை ஆசிரியை ஜான்சிராணி நன்றி கூறினார். செயற்குழு உறுப்பினர்கள் பாலசுப்ரமணியன், மீனாட்சிசுந்தரம், சீனிவாசன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.