/உள்ளூர் செய்திகள்/தேனி/ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவைஆண்டிபட்டி பேரூராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
ஆண்டிபட்டி பேரூராட்சிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தேவை
ADDED : ஆக 09, 2011 01:25 AM
ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதிக்கு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்க புதிய திட்டத்தை துவக்க வேண்டும்.
பேரூராட்சியில் சக்கம்பட்டி, ஆண்டிபட்டி, கொண்டமநாயக்கன்பட்டி பகுதிகளும், அதன் விரிவாக்கப்பகுதிகளும் உள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட அரப்படித்தேவன்பட்டி கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.குன்னூர் ஆற்றில் உறை கிணறுகள் அமைத்து, மோட்டார் மூலம் பம்ப் செய்து சேமிப்பு தொட்டிகளில் சேகரிக்கப்பட்டு மீண்டும் பம்ப் செய்யப்பட்டு அனுப்பப்படுகிறது.
ஆற்றில் அதிகப்படியான நீர் வரத்து இருந்தால் உறை கிணறுகள் நீரில் மூழ்கி விடுகின்றன. அப்போது ஆற்றில் செல்லும் நீர் நேரடியாக பம்பிங் செய்யப்பட்டு குடிநீருக்கு வினியோகிக்கப்படுகிறது.சகதியுடன் கிடைக்கும் நீரை வடிகட்டிய பிறகே பயன்படுத்த முடியும். இதனால் குடிநீரால் தொற்று நோய் ஏற்படுகிறது. குன்னூர் ஆற்றில் பம்பிங் செய்யப்படும் நீரை சுத்திகரிப்பு செய்வதற்கு தற்போதுள்ள திட்டத்தில் வசதிகள் இல்லை. பேரூராட்சி பகுதிக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்க தனித்திட்டம் கொண்டு வர வேண்டும்.


