Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த போலீஸ் கட்டுப்பாடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த போலீஸ் கட்டுப்பாடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த போலீஸ் கட்டுப்பாடு

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடத்த போலீஸ் கட்டுப்பாடு

ADDED : ஆக 18, 2011 12:00 AM


Google News

தேனி : விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை நடத்துபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

பிரவீண்குமார் அபினபு எஸ்.பி., கூறியதாவது: விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு சிலை செய்பவர்கள் களிமண்ணால் மட்டுமே செய்ய வேண்டும்.

கலருக்கு இயற்கை வர்ணங்களை பயன்படுத்த வேண்டும். ரசாயனங்களை பயன்படுத்தக் கூடாது.

* போலீஸ் அனுமதித்துள்ள உயரத்திற்கு மேல் அதிக உயரத்தில் சிலை செய்யக்கூடாது. சிலை வைக்கும் இடத்தில் தகர கூரை அமைக்க வேண்டும்.

* கடந்த ஆண்டு சிலை வைக்கப்பட்டிருந்த இடம், ஊர்வலம் சென்ற பாதை தவிர வேறு இடங்களில் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

* சிலை பாதுகாக்க 20 பேர் கொண்ட குழு அமைக்க வேண்டும். ஒரே நேரத்தில் 5 பேர் வீதம் 24 மணி நேரமும் சிலைகளை கண்காணிக்க வேண்டும்.

* மாவட்ட நிர்வாகம் அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும்.

* அனுமதி பெற்ற நேரத்தில் மட்டுமே ஊர்வலம் செல்ல வேண் டும். விதிகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us