/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமபந்தி விருந்துதிருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமபந்தி விருந்து
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமபந்தி விருந்து
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமபந்தி விருந்து
திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் சமபந்தி விருந்து
ADDED : ஆக 19, 2011 05:19 AM
திருச்செந்தூர்:திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் 65வது சுதந்திரதினவிழாவை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது.விழாவில் கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் தேசியக்கொடியை ஏற்றி பேசினார்.
முன்னதாக தேசியகொடி யானை மீது வைத்து கோயிலில் கிரிவலம் வந்து கொடியேற்றப்பட்டது.
மதியம் நடந்த சமபந்தி விருந்தில் டிஆர்ஓ.,அமிர்தஜோதி, ஆர்டிஓ.,பொற்கொடி, கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திருச்செந்தூர் அதிமுக., ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஒன்றிய ஜெ.,பேரவை செயலாளர் சுரேஷ்பாபு, டவுன் பஞ்., துணைத்தலைவர் கோட்டைமணிகண்டன், ஒன்றிய செயலாளர் வினோத், கவுன்சிலர் வடிவேல், எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் முத்தையா, பாரத உழவார பணிக்குழு தலைவர் அகிலன், கார்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விருந்திற்கான ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் பாஸ்கரன் செய்திருந்தார்.