/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/நாளை இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல்நாளை இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல்
நாளை இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல்
நாளை இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல்
நாளை இறுதி ஓட்டுச்சாவடி பட்டியல்தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தகவல்
ADDED : செப் 11, 2011 12:42 AM
தஞ்சாவூர்: ''ஓட்டுச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில்
ஆட்சேபனைகள், கருத்துக்கள் இருப்பின் பரிசீலித்து இறுதி செய்து, செப்டம்பர்
12ம் தேதிக்குள் ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிடப்படும்,'' என
தஞ்சாவூர் கலெக்டர் பாஸ்கரன் பேசினார்.தஞ்சாவூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
கூட்ட அறையில் உள்ளாட்சி தேர்தல் வரைவு ஓட்டுச்சாவடி பட்டியல்களை
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் உள்ளூர் பிரதிநிதிகளுடன்
கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்துக்கு கலெக்டர் பாஸ்கரன் தலைமை
வகித்து பேசியதாவது:நடைபெற உள்ள 2011ம் ஆண்டு சாதாரண உள்ளாட்சி
தேர்தல்களில் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நகர்புற உள்ளாட்சி
அமைப்புகளுக்கான மூன்று நகராட்சிகளில் 129 வார்டுகள் மற்றும் 22 டவுன்
பஞ்சாயத்துகளில் 336 வார்டுகளுக்கும் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன்
ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் 28 மாவட்ட
பஞ்சாயத்து வார்டுகளுக்கும் 276 வட்டார பஞ்சாயத்து வார்டுகளுக்கும் 589
கிராம பஞ்சாயத்து பதவி, 4,569 கிராம பஞ்சாயத்து வார்டுகளுக்கும் ஓட்டுச்
சீட்டுகள் மூலம் ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது.இத்தேர்தலுக்கு நகர்புற
உள்ளாட்சி அமைப்புகளில் 644 ஓட்டுச்சாவடிகளும் மற்றும் ஊரக உள்ளாட்சி
அமைப்புகளில் 2608 ஓட்டுச்சாவடிகளும் அமைக்கப்பட்டு அதற்கான வரைவு
ஓட்டுச்சாவடி பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ஆட்சேபனைகள்,
கருத்துக்கள் இருப்பின் பரிசீலித்து இறுதி செய்து, செப்டம்பர் 12ம்
தேதிக்குள் ஓட்டுச்சாவடி இறுதி பட்டியல் வெளியிடப்படும். நடைபெற இருக்கும்
உள்ளாட்சித் தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட அனைவரும் நல்
ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர்
பேசினார்.டி.ஆர்.ஓ., சுரேஷ்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட
இயக்குனர் வரதராஜன், டி.எஸ்.பி., ஜோஸ் தங்கையா, டவுன் பஞ்சாயத்து உதவி
இயக்குனர் சுரேஷ், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (உள்ளாட்சித்
தேர்தல்) மோகன், அனைத்து பஞ்சாயத்து ஒன்றிய அலுவலர் மற்றும் பலர்
பங்கேற்றனர்.