/உள்ளூர் செய்திகள்/சேலம்/ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வுஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு
ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு
ஆத்தூர்: ஆத்தூர் மற்றும் தலைவாசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், சுகாதாரத்துறை கூடுதல் இயக்குனர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
இதுகுறித்து மருத்துவ குழுவினர் கூறியதாவது: தமிழகத்தில், வளர் இளம் பெண்களுக்கும், குழந்தைகள் திருமணங்களும் பரவலாக நடத்தப்படுகிறது. குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த அரசு தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும், 70 சதவீதம் பெண்களுக்கு ரத்த சோகை உள்ளதால், கர்ப்ப காலத்தில் குழந்தை பெற்றெடுக்க முடியாமல் இறக்கவும் நேரிடுகிறது. அதனால், பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளை பரிசோதித்து ஊட்டசத்து மருந்து, மாத்திரைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ், கிராம பகுதிகளில் உள்ள வளர் இளம் பெண்களுக்கு, இலவச பரிசோதனை செய்து, ரத்த சோகை கண்டறிப்பட்டால் மருத்துவ சிகிச்சை வழங்கப்படுகிறது. தமிழகத்தை ரத்த சோகை இல்லாத மாநிலமாக, உருவாக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர். ஆய்வின் போது, தலைவாசல் வட்டார மருத்துவ அலுவலர் செந்தில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவ குழுவினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


