/உள்ளூர் செய்திகள்/சேலம்/மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்
மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்
மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்
மூன்று மண்டலங்களில் நேற்று 40 பேர் மனு தாக்கல்
சேலம்: சேலம் மாநகராட்சியில், அஸ்தம்பட்டி, கொண்டலாம்பட்டி, சூரமங்கலம் ஆகிய மண்டலங்களில் நேற்று, 40 பேர் வேட்பு மனுதாக்கல் செய்தனர்.
சேலம் கொண்டலாம்பட்டி மண்டல அலுவலகத்தில், நேற்று ஒரே நாளில், 16 பேர் கவுன்சிலர் பதவிக்கான வேட்பு மனுக்கலை தாக்கல் செய்தனர். இதில், 45, 46, 47, 48, 49, 50, 51, 52 ஆகிய வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை உதவி கமிஷனர் (பொறுப்பு) ஜெகநாதன் பெற்றுக் கொண்டார். 53, 54, 55, 56, 57, 58, 59, 60 ஆகிய வார்டுகளுக்கான வேட்பு மனுக்களை உதவி வருவாய் அலுவலர் குமார் பெற்றுக் கொண்டார்.
அ.தி.மு.க., சார்பில், 45வது வார்டில் கீதா, 46வது வார்டில் பாலசுப்பிரமணியன், 47வது வார்டில் கர்ணன், 50வது வார்டில் நடேசன், 51வது வார்டில் பரமசிவம், 52வது வார்டில் மீனாட்சி சுந்தரம், 53வது வார்டில் குலாப்ஜான் சாகுல், 55வது வார்டில் தங்கம்மாள் ஆகிய எட்டு பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பா.ம.க., சார்பில், 50வது வார்டில் பழனிசாமி, 58வது வார்டில் சண்முகம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். பாரதிய ஜனதா கட்சி சார்பில், 47வது வார்டில் சஞ்சய், 49 வது வார்டில் சேகர், 56 வது வார்டில் செல்வராஜ் ஆகியோர் ஆதரவாளர்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
பிரதான கட்சிகளை தவிர, 49வது வார்டில் சரவணன், 50வது வார்டில் முருகேசன், யுவராஜ், 51வது வார்டில் மணிகண்டன், 60வது வார்டில் தங்கம்மாள் உட்பட ஐந்து பேர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.