Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/லோக்பால் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

லோக்பால் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

லோக்பால் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

லோக்பால் மசோதா நகல் எரிப்பு போராட்டம்

ADDED : ஆக 17, 2011 03:52 AM


Google News

கடலூர் : கடலூரில் லோக்பால் மசோதா நகல் எரிப்பு போராட்டம் நடந்தது.

பஞ்சாயத்து முதல் பார்லிமென்ட் வரை ஊழலற்ற ஆட்சிக்கு வலுவான லோக்பால் மசோதா அமைக்க சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசு கொண்டு வந்த மசோதாவில் பிரதமர், நீதிபதிகள், எம்.பி.,க்கள் பெயர் இடம் பெறவில்லை. இதனை கண்டித்து மத்திய அரசு கொண்டு வந்த மசோதா நகலை எரிக்கும் போராட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட லோக்பால்களின் கூட்டமைப்பு சார்பில் கடலூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்தில் பொதுச் செயலர் நாகராஜ் தலைமை தாங்கினார். தலைவர் நடராஜ், துணைத் தலைவர் அப்பாச்சி, செயற்குழு உறுப்பினர் ராஜா முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ஆசைத்தம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us