Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

அன்னாஹசாரேவுக்கு ஆதரவாக தூத்துக்குடியில் உண்ணாவிரதம்

ADDED : ஆக 28, 2011 01:05 AM


Google News

தூத்துக்குடி : அன்னாஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து தூத்துக்குடியில் நேற்று உண்ணாவிரதம் நடந்தது.

லோக்பால் மசோதாவை உடனடியாக கொண்டு வரவேண்டும்.

இதற்காக போராடும் அன்னா ஹாசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தூத்துக்குடி ஐந்தாவது தூண் அமைப்பு சார்பில் நேற்று ராஜாஜி பூங்கா முன்பாக உண்ணாவிரதம் நடந்தது. ஐந்தாவது தூண் மாநகர அமைப்பாளர் சாமுவேல் தலைமை வகித்தார். மாவட்ட கிராம ஒருங்கிணைப்பாளர் ஆதிநாராயணன், கிராமவாழ் நலச்சங்கம் நயினார்குலசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊழல் எதிர்ப்பு இயக்கம் கணேசன், ஜோதிமணி ஆகியோர் துவக்கி வைத்தனர். மக்கள் உரிமைக்குழு அதிசயகுமார், மத்திய வியபாரிசங்க செயலாளர் நடராஜன், அழகர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். திருச்செல்வம் முடித்து வைத்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us