/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/டெலிபோன் கேபிள் அறுந்தது 4,500 இணைப்புகள் பாதிப்புடெலிபோன் கேபிள் அறுந்தது 4,500 இணைப்புகள் பாதிப்பு
டெலிபோன் கேபிள் அறுந்தது 4,500 இணைப்புகள் பாதிப்பு
டெலிபோன் கேபிள் அறுந்தது 4,500 இணைப்புகள் பாதிப்பு
டெலிபோன் கேபிள் அறுந்தது 4,500 இணைப்புகள் பாதிப்பு
ADDED : செப் 21, 2011 12:12 AM
திருப்பூர் : மாநகராட்சி பாலம் பணியின்போது டெலிபோன் ஒயர்
அறுக்கப்பட்டதால், திருப்பூர் ராயபுரம் பகுதியில் மூன்றாயிரம் டெலிபோன்
இணைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளன.
ராயபுரம் மெயின் ரோடு, மாநகராட்சி
நடுநிலைப்பள்ளி அருகில் உள்ள சாக்கடை பாலம் உயரம் குறைவாக இருந்ததால்,
அடிக்கடி அடைப்பு ஏற்பட்டு, சாக்கடை கழிவு நீர் வெளியேறி ரோட்டில் ஓடியது.
இதனால், சுகாதாரக்கேடு ஏற்பட்டதையடுத்து, மாநகராட்சி சார்பில் புதிய பாலம்
கட்டும் பணி துவங்கியது. இதற்காக, கனரக இயந்திரங்கள் மூலம் பழைய பாலம்
உடைக்கப்பட்டு, குழி தோண்டப்பட்டது. இப்பகுதியில், டெலிபோன் ஒயர்கள்
பதிக்கப்பட்டிருந்தன. இதுகுறித்து டெலிபோன் துறைக்கு தகவல் தெரிவிக்காமல்,
குழி தோண்டப்பட்டது. அலட்சியம் காரணமாக, தரையில் சென்று கொண்டிருந்த
டெலிபோன் பைபர் கேபிள்கள் துண்டிக்கப்பட்டன. 1,200 இணைப்புகள் கொண்ட கேபிள்
ஒன்று, 800 இணைப்புகள் கொண்ட கேபிள் ஒன்று, 400 இணைப்புகள் கொண்ட கேபிள்,
2,100 இணைப்புகள் கொண்ட கேபிள் 1 என 2,500 டெலிபோன் இணைப்பு கேபிள்கள்
அறுக்கப்பட்டன. இதனால், ராயபுரம், ஸ்டேட் பாங்க் காலனி உள்ளிட்ட
குடியிருப்புகள், அரசு அலுவலகங்களில் உள்ள டெலிபோன் மற்றும் இன்டர்நெட்
இணைப்புகள் தடைபட்டுள்ளன. டெலிபோன் ஊழியர்கள், அறுந்துள்ள பைபர் கேபிள்களை
இணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இப்பணிகள் முடிவடைய மூன்று நாட்களாகும்
என தெரிவித்தனர்.