Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/முதல்வர் ஜெ., நேற்று சூறாவளிப் பிரச்சாரம்

முதல்வர் ஜெ., நேற்று சூறாவளிப் பிரச்சாரம்

முதல்வர் ஜெ., நேற்று சூறாவளிப் பிரச்சாரம்

முதல்வர் ஜெ., நேற்று சூறாவளிப் பிரச்சாரம்

ADDED : அக் 10, 2011 02:56 AM


Google News
திருச்சி: திருச்சி மேற்கு தொகு தி இடைத்தேர்தல் வரும் 13ம் தேதி நடப்பதையொட்டி பிரச்சாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து 15க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் திருச்சியில் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.நில அபகரிப்பு வழக்கில் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சரும், மேற்கு தொகுதி தி.மு.க., வேட்பாளருமான நேருவுக்காக, முன்னாள் அமைச்சர்கள் வேலு, செல்வராஜ், எம்.பி.,க்கள் செல்வகணபதி, விஜயன், சிவா ஆகியோர் தலைமையில் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக்குழு தீவிர தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறது.நேற்று முன்தினம் நேருவை ஆதரித்து முன்னாள் துணை முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் தி.மு.க., தரப்பு உற்சாகம் அடைந்துள்ளது.அ.தி.மு.க., வேட்பாளர் பரஞ்ஜோதியை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக நேற்று மாலை ஐந்து மணிக்கு முதல்வர் ஜெயலலிதா தனிவிமானம் மூலம் திருச்சி வந்தார்.விமான நிலையத்தில் அமைச்சர்கள் பன்னீர்செல்வம், செங்கோட்டையன், நத்தம் விஸ்வநாதன், செந்தில்பாலாஜி, கோகுலஇந்திரா, சிவபதி, மாநகர் மாவட்ட செயலாளரும், எம்.எல்.ஏ.,வுமான மனோகரன், எம்.பி., குமார் ஆகியோர் விமான நிலையத்தில் முதல்வர் ஜெயலலிதாவை மலர்கொத்து கொடுத்து வரவேற்றனர்.அவர் திருச்சி சென்ட்ரல் பஸ் ஸ்டாண்ட், புத்தூர் நால்ரோடு, உறையூர், தென்னூர், பீமநகர், காஜாமலை, எடமலைப்பட்டி பு தூர் ஆகிய இடங்களில் இடைத்தேர்தல் வேட்பாளர் பரஞ்ஜோதியையும், மேயர் வேட்பாளர் ஜெயா மற்றும் மாநகராட்சி கவுன்சிலர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்தார்.சென்ட்ரல் பஸ்ஸ்டாண்ட் முதல் கடைசியாக அவர் பேசிய எடமலைப்பட்டி புதூர் வரை அனைத்து இடங்களிலும் ஆயிரக்கணக்கில் மக்களும், கட்சியினரும் திரண்டிருந்து ஜெயலலிதாவின் பேச்சை ரசித்து கேட்டனர்.அவர் பேசச் சென்ற இடங்களில் எல்லாம், அப்பகுதி பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள், எம்.எல். ஏ.,க்களால் செண்டை மேளம், தாரை, தப்பட்டை முழங்கவும், பல்வேறு கலைநிகழ்ச்சிகள் மூலமாகவும் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தல் வேட்பாளராக பரஞ்ஜோதி அறிவிக்கப்பட்டவுடன், அவரது இரண்டாவது மனைவி டாக்டர் ராணி ஏமாற்றிவிட்டதாக சர்ச்சை கிளப்பியதால், பெண்களின் ஆதரவு பரஞ்ஜோதிக்கு கிடைக்காது என்று பரவலமாக பேசப்பட்டது.ஆனால், நேற்று திருச்சி பிரச்சாரத்துக்கு வந்த ஜெயலலிதாவின் பேச்சை கேட்க ஆண்களை விட பெண்களே அதிகளவில் திரண்டிருந்ததால், பரஞ்ஜோதிக்கு பெண்கள் மத்தியில் பெரிய அளவில் கெட்ட பெயர் ஏற்படவில்லை என்பது தெளிவாகிறது.மொத்தத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் திருச்சி தேர்தல் பிரச்சாரம் அ.தி.மு.க.,வினர் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் விதமாக அமைந்து விட்டது.டீசர்ட், தொப்பியுடன்கலக்கிய பாசறையினர்நேற்று திருச்சி வந்த முதல்வர் ஜெயலலிதாவை இளைஞர் மற்றும் இளம்பெண் பாசறை மாநில செயலாளர் செந்தில்நாதன் தலைமையில், ஒவ்வொரு இடத்திலும் 5,00க்கும் மேற்பட்ட இளைஞர், இளம்பெண் பாசறையினர் டீசர்ட் மற்றும் தொப்பியுடன், ரோட்டின் இருபுறமும் வரிசையாக நின்று வரவேற்பு அளித்தனர்.பல இடங்களில் அவர்களின் வரவேற்பை கவனமாக பார்த்து, புன்னகையுடன் ஜெயலலிதா ஏற்றுக் கொண்டதாக இளம்பெண் பாசறையினர் பெரும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us