/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து செப்., 28ல் வேலைநிறுத்தம்சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து செப்., 28ல் வேலைநிறுத்தம்
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து செப்., 28ல் வேலைநிறுத்தம்
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து செப்., 28ல் வேலைநிறுத்தம்
சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியை கண்டித்து செப்., 28ல் வேலைநிறுத்தம்
ADDED : ஆக 22, 2011 12:11 AM
சிவகங்கை : சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கியில் 36 மேலாளர், 9 உதவி
மேலாளர் காலி பணியிடங்கள் நிரப்பபடாததை கண்டித்து, செப்.,28 ல் வேலை
நிறுத்தம் செய்வதென, ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
சிவகங்கையில் உள்ள
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் கீழ், 29 கிளைகள் செயல்படுகின்றன. இங்கு
டெபாசிட் தொகையாக 173 கோடி ரூபாய்; விவசாய கடன் உட்பட நடைமுறை மூலதனமாக
500 கோடி ரூபாய் என ஆண்டு தோறும் 1,000 கோடிக்கு வரவு செலவு நடக்கிறது.
இங்கு 36 மேலாளர்கள், உதவி மேலாளர்கள் உட்பட 266 ஊழியர்கள்
பணியாற்றவேண்டும். இதை நபார்டு மற்றும் மாநில கூட்டுறவு வங்கி
வலியுறுத்துகிறது. ஆனால், மாவட்ட அளவில் ஒரு மேலாளர் மட்டுமே உள்ளார்.
மேலாளர் 35; உதவி மேலாளர் 9 காலிபணியிடங்கள் உள்ளன. காலிபணியிடங்களால்
வங்கி நிர்வாகம் முடங்கியுள்ளது. விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் கடன் தர
முடியவில்லை. இதனால், தேசிய வங்கிகளை நோக்கி செல்கின்றனர். விவசாய நகை
கடன்களும் வழங்காமல் கிடப்பில் உள்ளது.கோரிக்கை:காலியாக உள்ள 35 மேலாளர்
பணியிடத்தை நிரப்பவேண்டும். மேலாளர் பதவி உயர்வுக்காக 42 உதவி மேலாளர்கள்
காத்திருக்கின்றனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும். ஓய்வு
பெற்றவர்களுக்கு உரிய பணப்பலன், கருணை அடிப்படை பணி நியமனம் உள்ளிட்ட 50
அம்ச கோரிக்கையை நிறைவேற்றுமாறு, வங்கி ஊழியர்கள் வலியுறுத்துகின்றனர்.இது
குறித்து மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர் சங்க பொது செயலாளர் கணேசன்
கூறுகையில்,'' இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆக.,25ல் கோரிக்கை அட்டை
அணிந்து ஊழியர்கள் பணியாற்றுவர். செப்.,7ம் தேதி சிவகங்கையில் உண்ணாவிரதம்
நடக்கும். அதற்கு பின்னும் நிர்வாகம் செவிசாய்க்காவிடில், செப்.,28ல் வங்கி
ஊழியர்கள் ஒட்டுமொத்த 'ஸ்டிரைக்கில்' ஈடுபடுவோம்,'' என்றார்.


