Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/பிரதிஷ்டைக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டும் பணி ஜரூர்

பிரதிஷ்டைக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டும் பணி ஜரூர்

பிரதிஷ்டைக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டும் பணி ஜரூர்

பிரதிஷ்டைக்கு தயாராகும் விநாயகர் சிலைகள் வர்ணம் தீட்டும் பணி ஜரூர்

ADDED : ஆக 14, 2011 03:06 AM


Google News
பொங்கலூர் : விநாயகர் சதுர்த்தி விழா நெருங்கி வருவதால், பொங்கலூர் அலகுமலையில் விநாயகர் சிலைகளுக்கு வர்ணம் தீட்டும் பணி வேகமடைந்துள்ளது.வரும் செப்.,1ம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைத்து பிரதிஷ்டை செய்வதற்காக கடந்த ஆறு மாதங்களாக அலகுமலையில் விநாயகர் சிலைகள் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

தற்போது, வர்ணம் தீட்டும் பணியில் விறுவிறுப்படைந்துள்ளது; 2,000 சிலைகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன; சிலை வடிவமைக்கும் பணியில், வெளியூர்களை சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இரவு பகலாக ஈடுபட்டு உள்ளனர். இங்கு மூன்றரை அடி, ஐந்தரையடி, ஏழரை அடி, ஒன்பதரை அடி உயரம் உள்ள சிலைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. ராஜ விநாயகர், பாம்பு விநாயகர், சிங்கம், புலி, மான், யானை, மீஞ்சூறு, நந்தி, அன்னப்பறவை விநாயகர், தாமரை, சிவன், செம்பருத்தி வடிவங்களில் விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us