/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சென்னிமலை யூனியன் அ.தி.மு.க., வேட்புமனுசென்னிமலை யூனியன் அ.தி.மு.க., வேட்புமனு
சென்னிமலை யூனியன் அ.தி.மு.க., வேட்புமனு
சென்னிமலை யூனியன் அ.தி.மு.க., வேட்புமனு
சென்னிமலை யூனியன் அ.தி.மு.க., வேட்புமனு
ADDED : செப் 28, 2011 12:49 AM
சென்னிமலை: சென்னிமலை யூனியன் கவுன்சிலர் பதவிக்கு கே.ஏ.கருப்புசாமி உள்பட அ.தி.மு.க., வேட்பாளர்கள் நேற்று மனுத்தாக்கல் செய்தனர்.
சென்னிமலை யூனியன் சேர்மன் அ.தி.மு.க., வேட்பாளர் கருப்புசாமி, 15
ஆண்டுகளாக கவுன்சிலராக உள்ளார். இவரும், அ.தி.மு.க., வேட்பாளர்கள் வார்டு
-1 சாந்தமூர்த்தி, 2 பசுபதிமோகனசாமி, 3 செல்வி, 4 விஸ்வநாதன், 5 கவிதா, 6
பழனியம்மாள், 7 சுப்பிரமணி, 10 சாந்தாமணி, 11 ஈஸ்வரன், 12 தங்கராஜ், 14
விஸ்வநாதன் ஆகியோர் நேற்று மனுத்தாக்கல் செய்தனர். காங்கேயம் எம்.எல்.ஏ.,
நடராஜ் வாழ்த்தினார்.கருப்புசாமி கூறுகையில், ''முதல்வர் செயல்படுத்தியுள்ள
திட்டங்கள் மக்களை சென்றடைந்து விட்டன. மக்கள் எங்களை வெற்றி பெற செய்வர்.
பத்தாண்டாக கவுன்சிலராக மக்களுக்கு நல்ல பல திட்டங்களை செய்துள்ளேன்.
அதனால் எனது வெற்றி எளிதாக இருக்கும்,'' என்றார்.