ADDED : ஆக 26, 2011 11:14 PM
ராஜபாளையம் : ராஜபாளையத்தில் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களால் வாறுகால் அடைப்பு ஏற்படுகிறது.
இதன் மீது நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.ராஜபாளையம் மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் சேரும், பாலித்தீன் பை மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை, வாறுகாலில் கொட்டுகின்றனர். வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்குகிறது. நகராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை.மேற்குதொடர்ச்சி மலையடிவாரம் அய்யனார்கோயில் பகுதி கடைகளில், பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துகின்றனர். மலையடிவாரம் என்பதால், இரவில் குடிநீர் மற்றும் உணவு தேடி ரும் வனவிலங்குகள், பிளாஸ்டிக் பொருட்களை சாப்பிட்டால், உயிருக்கு ஆபத்து உள்ளது. பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த நகராட்சி நிர்வாகம், தடைவிதிக்க வேண்டும்


