/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் உடைந்ததுகிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் உடைந்தது
கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் உடைந்தது
கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் உடைந்தது
கிராமத்திற்கு இயக்கப்பட்ட அரசு பஸ் உடைந்தது
ADDED : செப் 20, 2011 11:43 PM
ஆனைமலை : ஆனைமலை அருகே அரசு பஸ் பயணிகளுடன் செல்லும்போது உடைந்து
உருக்குலைந்ததால் டிரைவர் பஸ்சை நிறுத்தி பொதுமக்களின் உயிரை
காப்பாற்றினார்.
ஆனைமலை அடுத்த சுப்பேகவுண்டன்புதூர் பகுதிக்கு இரண்டு
பஸ்கள் இயங்கி வருகின்றன. இதில் ஒரு பஸ் பொள்ளாச்சியில் இருந்து
சுப்பேகவுண்டன்புதூர் வழியாக வாழைக்கொம்பு நாகூர் சென்றுவருகிறது. இந்த
பஸ் நேற்று காலை 6.40 மணிக்கு வாழைக்கொம்பு நாகூர் சென்று திரும்பி
சுப்பேகவுண்டன்புதூர் வந்தபோது பஸ் திடீரென்று பாதியில் உடைய துவங்கியது.
பஸ்சில் இருந்த பயணிகள் கூச்சலிடவே பஸ் டிரைவர் பஸ்சை நிறுத்தினார். இதனால்
பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். பின்னர் பொதுமக்கள், மாணவர்கள் ஒரு
கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று தங்களது பயணத்தை தொடர்ந்தனர்.
கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் இது போன்ற அரசு பஸ்களை உடனடியாக சீரமைக்க
போக்குவரத்துக்கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.