புதுப்பாளையம் கோவிலில் ஆடி பெருவிழா
புதுப்பாளையம் கோவிலில் ஆடி பெருவிழா
புதுப்பாளையம் கோவிலில் ஆடி பெருவிழா
ADDED : ஆக 11, 2011 04:11 AM
கடலூர்:கடலூர் புதுப்பாளையம் படவட்டம்மன் கோவிலில் நாளை (12ம் தேதி) ஆடி
பெருவிழா நடக்கிறது.இதனையொட்டி காலை 6 மணிக்கு கரகம் எடுத்து வருதல், 8
மணிக்கு அபிஷேகம், பகல் 12 மணிக்கு மகா தீபாராதனை, பகல் 1 மணிக்கு
அன்னதானம் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு அம்மன் வீதியுலா
நடக்கிறது.
ஏற்பாடுகளை படவட்டம்மன் ஆலய வழிபடுவோர் நல சங்கத்தினர் செய்து வருகின்றனர்.