/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது: மாணவிகள் உட்பட 16 பேர் காயம்பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது: மாணவிகள் உட்பட 16 பேர் காயம்
பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது: மாணவிகள் உட்பட 16 பேர் காயம்
பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது: மாணவிகள் உட்பட 16 பேர் காயம்
பொள்ளாச்சி அருகே பஸ் கவிழ்ந்தது: மாணவிகள் உட்பட 16 பேர் காயம்
ADDED : செப் 16, 2011 11:26 PM
பொள்ளாச்சி : சுற்றுலா பஸ் கவிழ்ந்ததில், திருச்சியை சேர்ந்த கல்லூரி மாணவிகள் 13 பேர் உள்பட 16 பேர் காயமடைந்தனர்.
திருச்சி தனியார் கலை அறிவியல் கல்லூரியைச்சேர்ந்த பேராசிரியர்கள் நான்கு பேர் தலைமையில், மூன்று பஸ்களில் 150 மாணவிகள் நேற்று முன் தினம் மதியம் 11.00 மணிக்கு குருவாயூர், மலம்புழா, கொச்சிக்கு சுற்றுலா புறப்பட்டனர். பொள்ளாச்சி அருகே நேற்று அதிகாலை 4.00 மணிக்கு பஸ்கள் வந்த போது, (டிஎன் 45 ஏஎப் 3838) பஸ் கட்டுப்பாடு இழந்து ரோட்டில் கவிழ்ந்தது. பஸ்சிலிருந்த மாணவிகள் அலறினர். அவ்வழியாக வாகனங்களில் வந்தவர்கள் மாணவிகளை மீட்டனர். கோமங்கலம் போலீசாரும், உடுமலை தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். கிரேன் உதவியுடன் கவிழ்ந்த பஸ் தூக்கி நிறுத்தப்பட்டு அப்பகுதியில் போக்குவரத்து சீர் செய்யப்பட்டன. விபத்தில் காயமடைந்த கல்லூரி பேராசிரியர் திருச்சி லால்குடி ஸ்ரீதேவி(30), அதே பகுதியை சேர்ந்த டிரைவர்கள் மருதராஜ்(42), டிரைவர் கவிராஜ்(39), மாணவிகள் சூரியா(20), வான்மதி(20), விஜயா(20), சிந்து(20), விஜயலட்சுமி(20) கோவையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயமடைத்த மாணவிகள் வினோதினி(19), விமலாதேவி(19), சுரேகா(19), பி.சுகன்யா(19), எஸ்.சுகன்யா(19), வித்யா(19), தாமரை செல்வி(19), யாழினி(19) முதலுதவி சிகிச்சையைடுத்து திருச்சி திரும்பினர். கோமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.