ADDED : ஆக 09, 2011 12:30 AM
சேலம் : சேலம் தாசநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பாலமோகன்ராஜ் என்பவர் கொடுத்த, நில மோசடி புகாரின்படி, தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்டு, கோவை சிறையில் அடைக்கப்பட்டார்.
இவ்வழக்கில் ஜாமின் கேட்டு, வீரபாண்டி ஆறுமுகத்தின் வழக்கறிஞர் நாராயணன், சேலம் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இம்மனு மீதான விசாரணையை ஆக., 8 க்கு மாஜிஸ்திரேட் ஸ்ரீவித்யா ஒத்திவைத்தார். நேற்று ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது கூடுதல் அரசு வழக்கறிஞர் சலீம், வாதத்தை ஏற்று ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


