ADDED : செப் 01, 2011 09:01 PM
பழநி : சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பழநி வரதமாநதி அணையை பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில், பழநி-கொடைக்கானல் ரோட்டில் வரதமாநதி அணை உள்ளது. பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அணையில், குளுமையான சூழலை வழங்கும் பசுமையான மரங்கள் பல உள்ளன. இவை தவிர குடும்பத்தினருடன் பொழுது போக்குவதற்கான பூங்காவும் உள்ளது. பண்டிகை காலம் மட்டுமின்றி வாரந்தோறும் சனி, ஞாயிறு கிழமைகளில், இங்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இருப்பினும் அதற்கேற்ப அணையை பராமரிப்பதில் அதிகாரிகள் கவனம் செலுத்தவில்லை. அணை அருகே மலைக்குன்றில் அமைக்கப்பட்டுள்ள ஓய்வு அறையும், பராமரிப்பின்றி பாழடைந்துள்ளது. செடிகள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதால், இங்குள்ள பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள சிலை செடிகளுக்குள் மறைந்து காணப்படுகிறது. குழந்தைகளுக்கான விளையாட்டு அமைப்புகளும், பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இவற்றை சீரமைத்து, அணைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க மாவ ட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.