/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/நாசரேத் அருகே கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை போலீஸ் குவிப்பு : 10 பேர் மீது வழக்குப் பதிவுநாசரேத் அருகே கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை போலீஸ் குவிப்பு : 10 பேர் மீது வழக்குப் பதிவு
நாசரேத் அருகே கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை போலீஸ் குவிப்பு : 10 பேர் மீது வழக்குப் பதிவு
நாசரேத் அருகே கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை போலீஸ் குவிப்பு : 10 பேர் மீது வழக்குப் பதிவு
நாசரேத் அருகே கோஷ்டி மோதல் 3 வீடுகள் சூறை போலீஸ் குவிப்பு : 10 பேர் மீது வழக்குப் பதிவு
ADDED : செப் 28, 2011 12:41 AM
நாசரேத் : நாசரேத் அருகே கோஷ்டி மோதலில் 3 வீடுகள் சூறையாடப்பட்டது.
பதட்டம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து நாசரேத் போலீசார் இருதரப்பில் 10 பேர், கல்லூரி பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர், ரேஷன்கடை விற்பனையாளர் உட்பட 10பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து நாசரேத் போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, நாசரேத் அருகிலுள்ள ஞானராஜ் நகரில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி கடந்த மாதம் 30ம் தேதி அன்று விநாயகர்சிலை வைத்ததாக நாசரேத் போலீசார் பாலமுருகன், செல்லத்துரை, ராமர், மகாராஜன் ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிந்து விநாயகர் சிலையை அப்புறப்படுத்தினர். இதற்கு காரணம் அருள்முத்துராஜ் தரப்பினர்தான் என நினைத்த பாலமுருகன் தரப்பினர் அருள்முத்துராஜை கடந்த 25ம் தேதி அடித்து உதைத்துள்ளனர். இதில் அருள்முத்துராஜ் கொடுத்த புகாரின் பேரில் செந்தில், அவரது மனைவி கலா, பார்வதி, பாலமுருகன், அவரது மனைவி லட்சுமி, மகராஜன், மோகன் ஆகிய 7பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர். அன்று மாலையே நாசரேத் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு பாங்கால் நடத்தப்பட்டுவரும் ரேஷன்கடையில் விற்பனையாளராக பணிபுரியும் குட்டி, அருள் முத்துராஜ், நாசரேத் மர்காஷிஸ் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவராக இருந்து வரும் வின்சென்ட் ஆகிய 3 பேரும் சேர்ந்து பாலமுருகன் தரப்பில் உள்ள கலா, பார்வதி, லெட்சுமி ஆகிய 3 பேரின் வீட்டை அடித்து நொறுக்கி, தடுக்கவந்த 3 பேரையும் அவதூறான வார்த்தைகளால் பேசி, காலால் மிதித்து கீழே தள்ளி அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து கலா கொடுத்த புகாரின் அடிப்படையில் நாசரேத் போலீசார் 3பேர் மீது வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர். படுகாயமடைந்த கலா, பார்வதி, லெட்சுமி பாளை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் நாசரேத் பகுதியில் பரபரப்பாக பேசப்படுகிறது.