/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா : ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பங்கேற்புஅங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா : ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பங்கேற்பு
அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா : ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பங்கேற்பு
அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா : ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பங்கேற்பு
அங்கன்வாடி மைய கட்டிடம் திறப்பு விழா : ஆதிதிராவிடர் துறை அமைச்சர் பங்கேற்பு
ADDED : ஜூலை 19, 2011 12:40 AM
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட செங்கிப்பட்டி, மேட்டுத்தெரு ஆகிய பகுதிகளில் கட்டிமுடிக்கப்பட்டுள்ள அங்கன்வாடி மைய கட்டிடங்களின் திறந்துவைத்து தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது: தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க., ஆட்சி அமைய ஆதரவளித்த இப்பகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
இப்பகுதிகளில் அங்கன்வாடி மையங்களுக்கு புதிய கட்டிடம் வேண்டும் என்ற உங்களது கோரிக்கை இன்று நிறைவேறியுள்ளது. எம்.எல்.ஏ., நிதியின் கீழ் தலா 2.70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இக்கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கவேண்டும் என்ற உங்களது கோரிக்கையும் இந்தாண்டே நிறைவேற்றப்படும். ஜல்லி, மணல், செங்கல், சிமென்ட், கம்பி போன்ற கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வால் கட்டுமானப் பணிகள் முடங்கியது. தற்போது இவற்றின் விலையை குறைக்க முதல்வர் நடவடிக்கை எடுத்து வருகிறார். விரைவில் கட்டுமானப் பொருட்களின் விலை குறைய உள்ளது. இதுபோன்று ஏழை, எளிய மக்களின் கோரிக்கைகளுக்கு இந்த அரசு செவிமடுப்பதால் விரைவில் உங்களது கோரிக்கைகள் அனைத்தும் படிப்படியாக நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் ராமையா, எம்.எல்.ஏ., விஜயபாஸ்கர், பஞ்சாயத்து துணைத் தலைவர் முகம்மது நஸீர், கவுன்சிலர்கள் லெட்சுமணன், செல்வராஜ், கனகமுத்து, இளஞ்செல்வி, மகமூதா பீவி, மீரா மொய்தீன், அஞ்சலிதேவி உட்பட பலர் பங்கேற்றனர்.