/உள்ளூர் செய்திகள்/கடலூர்/இப்ப விழுமோ... எப்ப விழுமோ... மரண பயத்தில் அரசு பள்ளி மாணவர்கள்இப்ப விழுமோ... எப்ப விழுமோ... மரண பயத்தில் அரசு பள்ளி மாணவர்கள்
இப்ப விழுமோ... எப்ப விழுமோ... மரண பயத்தில் அரசு பள்ளி மாணவர்கள்
இப்ப விழுமோ... எப்ப விழுமோ... மரண பயத்தில் அரசு பள்ளி மாணவர்கள்
இப்ப விழுமோ... எப்ப விழுமோ... மரண பயத்தில் அரசு பள்ளி மாணவர்கள்
ADDED : ஆக 28, 2011 11:09 PM
சேத்தியாத்தோப்பு : கல்வித்துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் காணூர் துவக்கப்பள்ளி இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது.
கீரப்பாளையம் ஒன்றியம் காணூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியை காமராஜரின் நெருங்கிய நண்பரும், தென்னாற்காடு மாவட்ட ஜில்லா போர்டு தலைவருமான காணூர் சாமிக்கண்ணு படையாட்சி காமராஜரிடம் வாதாடி கொண்டு வந்ததாக வரலாறு உண்டு. இச்சிறப்பு வாய்ந்த பள்ளிக் கட்டடம் மெல்ல மெல்ல சிதைந்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் தங்கள் ஊர் துவக்கப்பள்ளியின் அவலத்தை யாரும் கண்டு கொள்ளவில்லை என அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர். காமராஜரால் துவங்கப்பட்ட காணூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 180 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இக்கட்டடத்தின் மேற்கூரை பகுதியில் அனைத்து மரத்தூண்களும் செல்லரித்து ஒடிந்து விழும் நிலையில் உள்ளது. மேலும் பல பகுதிகளை செல்லரித்து வருகிறது. கனமான காற்று வீசினால் உயிரை கையில் பிடித்துக் கொண்டு மாணவர்கள் கட்டடத்திலிருந்து வெளியேறி விடுகின்றனர். அவ்வப்போது ஏற்படும் மரமுறிவு சத்தங்கள் மாணவர்களை மட்டுமின்றி ஆசிரியர்களையும் அச்சமடையச் செய்கிறது. பள்ளியின் கூரை அமைந்துள்ள மரச்சட்டங்கள் உலுத்து துகள்கள் கொட்டிக் கொண்டிருக்கிறது. இது குறித்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடமும் ஒன்றிய அதிகாரிகளிடமும் கொடுத்த புகார்களுக்கு யாரும் செவி சாய்க்கவில்லை. பள்ளியில் பெரிய விபத்து ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகமும், கல்வித்துறையும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.