/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/வேப்பலோடை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குடியிருப்புகள் கட்ட கோரிக்கைவேப்பலோடை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குடியிருப்புகள் கட்ட கோரிக்கை
வேப்பலோடை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குடியிருப்புகள் கட்ட கோரிக்கை
வேப்பலோடை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குடியிருப்புகள் கட்ட கோரிக்கை
வேப்பலோடை ஆரம்ப சுகாதாரநிலையத்தில் குடியிருப்புகள் கட்ட கோரிக்கை
குளத்தூர் : வேப்பலோடை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்ட வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.வேப்பலோடை அன்னைதெரசா கிராம பொதுநலச்சங்க செயலாளர் ஜேம்ஸ் அமிர்தராஜ் முதல்வரின் தனிப்பிரிவுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, வேப்பலோடையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
இதற்கு ரூ.10-28 லட்சத்தில் டாக்டர்கள் குடியிருப்பு கட்ட மதிப்பீடு பட்டியல் தயாரிக்கப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடந்த 2009ம் ஆண்டு அரசு தரப்பில் பதில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தற்போது நியமிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கும் குடியிருப்பு வசதி செய்து தரப்படவில்லை. எனவே தாங்கள் வேப்பலோடையில் டாக்டர் மற்றும் செவிலியர் குடியிருப்பு கட்ட உத்தரவிட வேண்டுகிறோம் இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


