Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/தோட்டக்கலை உதவி இயக்குனர் மீதுகலெக்டரிடம் விவசாயிகள் புகார்

தோட்டக்கலை உதவி இயக்குனர் மீதுகலெக்டரிடம் விவசாயிகள் புகார்

தோட்டக்கலை உதவி இயக்குனர் மீதுகலெக்டரிடம் விவசாயிகள் புகார்

தோட்டக்கலை உதவி இயக்குனர் மீதுகலெக்டரிடம் விவசாயிகள் புகார்

ADDED : ஆக 19, 2011 11:03 PM


Google News
தேனி:தோட்டக்கலை உதவி இயக்குனர் செந்தில்குமார் மீது பல்வேறு புகார்களை தெரிவித்து கலெக்டரிடம் விவசாயிகள் புகார் தந்தனர்.கம்பம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் செந்தில்குமார். அப்பகுதியில் போட்டி சங்கத்தை உருவாக்கி உள்ளார். ஒட்டுமொத்த திராட்சை விவசாயிகளை ஒன்றிணைத்து சங்கம் உருவாக்க இடையூறு செய்கிறார். அவர் ஆதரவு உள்ள சங்கத்தினருக்கு மட்டும் பயிற்சிகள் அளித்தல், அரசு மானியங்கள் பெற்றுத்தருகிறார்.வெளிமாநிலங்களுக்கு விவசாயிகளை அழைத்து சென்றதில் முறைகேடு செய்துள்ளார். இப்புகார் களை கூறி, சுருளிபட்டி திராட்சை உற்பத்தியாளர் சங்க தலைவர் பழனிச்சாமி, செயலாளர் முகுந்தன் தலைமையில் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் பழனிசாமியிடம் புகார் மனு அளித்தனர்.ஐந்து மாவட்ட விவசாய சங்க தலைவர் அப்பாஸ் பேசுகையில், கேரளாவிற்கு தோட்ட வேலைக்கு செல்பவர்களிடம் கள்ள நோட்டுக்களை கூலியாக தருவதாக புகார் தெரிவித்தார்.விசாரணை: கலெக்டர் பழனிசாமி கூறுகையில், 'செந்தில்குமார் மீது தரப்பட்ட புகார் குறித்து விசாரணை நடத்த அத்துறை இணை இயக்குனர் இமாம்தீனுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது,'என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us