/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்
பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்
பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்
பாலப்பாளையம் சங்கம் 100 சதம் கடன் வசூல்
ADDED : ஜூலை 11, 2011 02:49 AM
ஈரோடு: பாலப்பாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் சென்றாண்டு வழங்கிய அனைத்து கடனையும் 100 சதவீதம் வசூல் செய்துள்ளது.
கூட்டுறவு ஒன்றியம் மூலம் சிறப்பு உறுப்பினர் கல்வித்திட்ட முகாம் மற்றும் கடன் வழங்கும் விழா, இச்சங்கத்திநடந்தது. மண்டல இணைப் பதிவாளர் பாபு பேசுகையில், ''இந்தாண்டு 20 கூட்டுறவு கடன் சங்கங்களில் விவசாய சேவை மையங்கள் துவக்கப்பட உள்ளன. இதன்மூலம், விவசாயிகளுக்கு குறைந்த வாடகையில் டிராக்டர், டிரில்லர் வாடகைக்கு விடப்படும். ஆள் பற்றாக்குறையை போக்கி அதிக மகசூல் விவசாயிகள் பெற முடியும்,'' என்றார். பெருந்துறை எம்.எல்.ஏ., வெங்கடாசலம், 93 பேருக்கு 44 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் கடன்கள் வழங்கி பேசுகையில், ''பெருந்துறை தொகுதிக்குட்பட்ட சங்கங்களில் பாலப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், சென்றாண்டு வழங்கிய அனைத்து வகை கடனையும் 100 சதவீதம் வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது,'' என்றார். துணைப் பதிவாளர் செந்தில்குமார், மத்திய கூட்டுறவு வங்கி அதிகாரி மலர்விழி, சங்க தனி அலுவலர் துரைராஜ், பிரச்சார அலுவலர் ஆனந்தராஜ், ஒன்றிய தனி அலுவலர் செங்கோடப்பன் உள்பட பலர் பங்கேற்றனர்.