Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஆடியிலே அருள்தரும் அம்மன் கோயில்கள்

ஆடியிலே அருள்தரும் அம்மன் கோயில்கள்

ஆடியிலே அருள்தரும் அம்மன் கோயில்கள்

ஆடியிலே அருள்தரும் அம்மன் கோயில்கள்

ADDED : ஜூலை 26, 2011 12:46 AM


Google News

மதுரை : ஆடி பிறந்துவிட்டால் காற்று அடிக்குமோ, அடிக்காதோ, அம்மன் கோயில்களில் எல்லாம் தீச்சட்டி, முளைப்பாரி, பூ மிதித்தல், அன்னதானம், வீதி உலா என பக்தி களைகட்டி விடும்.

மதுரை பகுதிகளில் உள்ள சில முக்கிய கோயில்களில் ஆடி மாத சிறப்பு நிகழ்ச்சிகள் இதோ...



மதுரை மீனாட்சி அம்மன் கோயில் (0452 - 234 9868 ) தினமும் காலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு அம்மன் சன்னதி வாசலில் சித்திவிநாயகர், முருகனுக்கு பூஜை செய்யப்படும். காலை 5.10 மணிக்கு பள்ளியறையில் உள்ள சுவாமி, அம்மனுக்கு பூஜை. இரவு 7.30 மணிக்கு அர்த்தசாம பூஜைக்காக திரை போடப்பட்டு இரவு 8 மணிக்கு விலக்கப்படும். அப்போது அம்மனை வெள்ளை பட்டுப்புடவை அல்லது காட்டன் புடவையில் இரவு 9.15 மணி வரை தரிசிக்கலாம். பின், பள்ளியறை பூஜை நடக்கும். ஆடி முளைக்கொட்டு உற்சவம் ஜூலை 30ல் துவங்குகிறது. ஜூலை 31 காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. ஆக.,1ல் காலை 9 மணிக்கு தங்கச்சப்பரத்திலும், இரவு 9 மணிக்கு வெள்ளி அன்னவாகனத்திலும் ஆடிவீதியில் சுவாமி உலா, ஆக.,2ல் ஆடிப்பூரவிழா நடக்கிறது. அன்று காலை 10.30 மணிக்கு மூலவர், உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கும். ஆக.,3ல் காலை 9 மணிக்கு தங்கச்சப்பரம், இரவு வெள்ளியானையில் அம்மனும், சுவாமியும் உலா வருகின்றனர். ஆக.,4, இரவு 9 மணிக்கு வெள்ளி யானை வாகனம், ஆக.,5ல் இரவு 9 மணிக்கு ரிஷப வாகனம், ஆக.,6ல் இரவு 9 மணிக்கு கிளி வாகனத்தில் உலா வருகின்றனர்.



தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் (0452 - 231 1475 )காலை 6 மணிக்கு நடை திறப்பு காலை 11.45 மணிக்கு திரை போடப்பட்டு அபிஷேகம்மதியம் 12.15 மணிக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைஇரவு 9 மணிக்கு நடைசாத்தல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் இரவு 10 மணிக்கு நடைசாத்தல்.



சோழவந்தான் ஜெனகைமாரியம்மன் கோயில் நடைதிறப்பு : தினமும் காலை ஆறு முதல் பகல் 12 மணி வரை, மாலை நான்கு முதல் இரவு ஒன்பது மணி வரை. ஆடி வெள்ளி, செவ்வாய் கிழமை மட்டும் காலை ஆறு முதல் இரவு பத்து மணி வரை நடை திறந்திருக்கும். ஆடிபூரத்தன்று அம்மனுக்கு ஆராட்டு விழா, பாலாபிஷேகம், திருமஞ்சனம் சாற்றுதல், பூச்சொரிதல் விழா நடக்கும். ஆடி வெள்ளியன்று கூழ் வழங்குதல், ஆடி கடைசி வெள்ளியன்று மாலை ரிஷபவாகனத்தில் அம்மன் புறப்பாடு நடக்கும்.



ரிசர்வ்லைன் மாரியம்மன் கோயில்நடைதிறப்பு : காலை 4.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 9.30 மணி வரை. ஆக.,2ல் நடக்கும் ஆரப்பூரத்திருவிழாதான் இங்கே விசேஷம். அன்று காலை 8.30 மணிக்கு 3008 சுமங்கலி பூஜையும், மாலை 6 மணிக்கு 3008 திருவிளக்கு பூஜையும் நடக்கிறது.



மடப்புரம் காளி கோயில் (04574 - 265 305)தினமும் காலை 6.30 மணிக்கும், 8.30 மணிக்கும் பூஜை, இரவு ஒரு மணிக்கு உச்சிக்கால பூஜையும் நடக்கிறது. இரவு 8.30 மணிக்கு அர்த்தசாமநடைசாத்தல் பூஜை நடக்கிறது.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us