/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/புதிய வழித் தடத்தில் பஸ்கள் துவக்க விழாபுதிய வழித் தடத்தில் பஸ்கள் துவக்க விழா
புதிய வழித் தடத்தில் பஸ்கள் துவக்க விழா
புதிய வழித் தடத்தில் பஸ்கள் துவக்க விழா
புதிய வழித் தடத்தில் பஸ்கள் துவக்க விழா
ADDED : ஆக 28, 2011 12:07 AM
சங்கராபுரம் : சங்கராபுரம் பஸ் நிலைய வளாகத்தில் புதிய வழித்தடத்தில் அரசு பஸ்கள் துவக்க விழா நடந்தது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்ட நிர்வாக இயக்குனர் பால்ராஜ் தலைமை தாங்கினார்.
பொது மேலா ளர் பிரேம் குமார் முன்னிலை வகித்தார். புதிய வழித்தடத்தில் பஸ் போக்குவரத்தை துவக்கி வைத்து எம்.எல்.ஏ., மோகன் பேசியதாவது: தமிழக முதல்வரிடம் கோரிக்கை வைத்தேன். இன்று 12 பஸ்கள் புதிய வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. தமிழகத்தில் பஸ்கள் செல்லாத கிராமமே இருக் கக் கூடாது என்று தமிழக முதல்வர் உத்தரவிட்டுள் ளார். சங்கராபுரம் தொகுதியில் அனைத்து பகுதிகளி லும் விரைவில் பஸ் வசதி செய்து தரப்படும். தமிழக அரசு 3000 பஸ்கள் வாங்கியுள்ளது. விழுப்புரம் கோட்டத்திற்கு 196 புதிய பஸ்கள் வந்துள்ளன. விழுப்புரம் கோட்டத்தில் 4 லட்சத்து 38 ஆயிரம் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் போக்குவரத்து கழகத்திற்கு 70 கோடி செலவாகிறது. சங்கராபுரம் அரசு மருத்துவமனை இரண்டு மாதத்திற்குள் மேம்படுத்தப்படும். சங்கராபுரத்திற்கு ஒரு கல்வி நிலையம் அமைக்க தமிழக முதல்வர் ஓரிரு நாளில் அறிவிக்க உள்ளார். இவ்வாறு எம்.எல்.ஏ., மோகன் பேசினார். கோட்ட மேலாளர்கள் சண்முக சுந்தரம், பொன் முடி, கிளை மேலாளர் கிருஷ்ண மூர்த்தி பங் @கற்றனர். அறிவண்ணல் நன்றி கூறினார்.


