Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/சி.பி.ஐ., காவலில் வங்கி மேலாளர்

சி.பி.ஐ., காவலில் வங்கி மேலாளர்

சி.பி.ஐ., காவலில் வங்கி மேலாளர்

சி.பி.ஐ., காவலில் வங்கி மேலாளர்

ADDED : ஜூலை 14, 2011 01:27 AM


Google News

மதுரை : மதுரை ஆத்திக்குளம் சந்திரசேகரன் (51).

இவர், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் ஸ்டேட் வங்கி மேலாளர். இவர், தக்கலை மணி மனைவி செந்தில்குமாரி (39), மதுரை விளாங்குடி சகிதா, உச்சப்பட்டி கருப்பையா, குளித்தலை அமலேஷ் முந்திரி நிறுவன உரிமையாளர் மனோஜ் ஆகியோரிடம் போலி ஆவணங்களை பெற்று 53 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கினார். மண்டல மேலாளர் புகார்படி, ஐவர் மீது சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தனர். சந்திரசேகரன், செந்தில்குமாரியை கைது செய்து, மதுரை சி.பி.ஐ., கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். ஜூலை 18ம் தேதி வரை சந்திரசேகரனை சி.பி.ஐ., காவலில் வைக்கவும், செந்தில்குமாரியை ஜூலை 27ம் தேதி வரை ரிமாண்ட் செய்தும் நீதிபதி ஜெகநாதன் உத்தரவிட்டார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us