/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச்சாவடிகள் அனைத்து அரசியல் கட்சிகள் வலியுறுத்தல்
திருநெல்வேலி : நெல்லை மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு வசதியாக ஓட்டுச் சாவடிகளை அமைக்க வேண்டும் என்று நெல்லையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.
பகுஜன் சமாஜ் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் தேவேந்திரன் கூறும் போது, ''மானூர், குத்தாலபேரி, ஐகான்புரம் பகுதிகளில் போதுமான ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்படவில்லை. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இப்பகுதிகளில் அதிக ஓட்டுச் சாவடிகளை அமைக்க வேண்டும். வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல், மாற்றம் செய்தல் பணிகளுக்கு போதுமான விண்ணப்பங்களை வழங்க வேண்டும்' என்றார். மாவட்டத்தில் வரைவு ஓட்டுச் சாவடிகளின் பட்டியல் அரசியல் கட்சிளின் நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் ஏதாவது ஆட்சேபணை இருந்தால் கலெக்டரிடம் தெரிவிக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அனைத்து பகுதிகளிலும் உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பட்டியலை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தயாரிக்க வேண்டும். வரும் 19ம் தேதிக்கு முன்னர் இப்பட்டியல் தயாரிக்கப்பட்டால்தான் அவர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்த முடியும் என்று அலுவலர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர். நகராட்சிகளின் மண்டல நிர்வாக இயக்குனர் மோகன், உதவியாளர் திராவிட மணி, மாநகராட்சி உதவி கமிஷனர்கள், பி.டி.ஓக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். இதில் அதிமுக சார்பில் மூர்த்தி, ராமசுப்பிரமணியன், சண்முகசுந்தரம், காங்., சிந்தா சுப்பிரமணியன், பா.ஜ அன்புராஜ், பாலசுப்பிரமணியன், முருகதாஸ், சுரேஷ், காங்., கொடிக்குறிச்சி முத்தையா, சொர்ணம், சமக தங்கராஜ், தேசியவாத காங்., முத்துவேல் உட்பட பலர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் திமுகவினர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர்.