/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/வேட்புமனு செய்யாத காங்., வேட்பாளர்கள்கட்சியினர் "பகீர்' குற்றச்சாட்டுவேட்புமனு செய்யாத காங்., வேட்பாளர்கள்கட்சியினர் "பகீர்' குற்றச்சாட்டு
வேட்புமனு செய்யாத காங்., வேட்பாளர்கள்கட்சியினர் "பகீர்' குற்றச்சாட்டு
வேட்புமனு செய்யாத காங்., வேட்பாளர்கள்கட்சியினர் "பகீர்' குற்றச்சாட்டு
வேட்புமனு செய்யாத காங்., வேட்பாளர்கள்கட்சியினர் "பகீர்' குற்றச்சாட்டு
ADDED : செப் 30, 2011 01:40 AM
நாமக்கல்: 'நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நகராட்சி கவுன்சிலர், டவுன்
பஞ்சாயத்து மற்றும் ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்கு
குறைந்த அளவிலான வேட்பாளர்களே காங்கிரஸ் கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டனர்.
அதில், பல வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய முன்வராமல்
முடங்கிவிட்டனர்' என, அக்கட்சியினர் குற்றச்சாட்டு
எழுப்பியுள்ளனர்.நாமக்கல் மாவட்டத்தில், ஐந்து நகராட்சிகள் உள்ளன. அந்தந்த
நகராட்சி வார்டுகளுக்கான கவுன்சிலர் வேட்பாளர் பட்டியலை, அ.தி.மு.க,
தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சியினர் முன்னதாக வெளியிட்டனர். எனினும்,
காங்கிரஸ் கட்சியில் மட்டும் நகராட்சி சேர்மன், கவுன்சிலர் என அனைத்து
வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு, வெகு தாமதமாக வெளியிடப்பட்டது.ஒரு வழியாக,
நேற்று முன்தினம் (28ம் தேதி) நகராட்சி சேர்மன், டவுன் பஞ்சாயத்து சேர்மன்,
மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், யூனியன் கவுன்சிலர் உள்ளிட்டவை அடங்கிய
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.அந்தப் பட்டியலும் முழுமையாக இல்லை.
நகராட்சி, டவுன் பஞ்சாயத்து என அனைத்து உள்ளாட்சிகளிலும் குறிப்பிட்ட
எண்ணிக்கையிலான வேட்பாளர்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டனர். இரண்டாவது
வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
ஆனால், அதுபோல்
எதுவும் வெளியிடப்படவில்லை.நாமக்கல் நகராட்சியில் உள்ள, 39 வார்டில், 15
வார்டுகளுக்கு மட்டுமே காங்கிரஸ் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
அதுபோல், ராசிபுரம் நகராட்சியில், மொத்தம் உள்ள, 27 வார்டில், எட்டு
வார்டுகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். குமாரபாøளையம்
நகராட்சியில் மொத்தம் உள்ள, 33 வார்டில், 18 வார்டுகளுக்கு மட்டுமே
வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
பள்ளிபாளையம் நகராட்சியில் மொத்தம் உள்ள, 21 வார்டில், 12 வார்டுகளுக்கு
மட்டும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டனர். திருச்செங்கோடு நகராட்சியில் மட்டும்
33வார்டுகளுக்கும் வேட்பாளர் பட்டியல் வெளியடப்பட்டுள்ளது. அதுபோல்,
மாவட்டத்தில் உள்ள டவுன் பஞ்சாயத்து, மாவட்ட பஞ்சாயத்துக் கவுன்சிலர்,
யூனியன் கவுன்சிலர் பதவியிடங்களுக்கு மொத்தம் உள்ள எண்ணிக்கைக்கும்
குறைவாகவே காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள் மனுதாக்கல்
செய்துள்ளனர்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் சிலர்
கூறியதாவது:வேட்பாளர் தேர்வு செய்வது முதல் அறிவிப்பு வரை, கட்சியின்
மாவட்ட நிர்வாகிகள் மத்தியில் பல குழப்பம் இருந்து வந்தது. வேட்பாளர்
பட்டியல் வெளியிடும் வரை விருப்ப மனு அளித்திருந்த காங்கிரஸ் கட்சியினர்
ஒருவரைக் கூட, வேட்பாளர் என அரிதியிட்டுக் கூற முடியாத சூழலே இருந்தது.
நகராட்சிகள் மட்டுமின்றி, சேந்தமங்கலம், பாண்டமங்கலம் உள்ளிட்ட, 19 டவுன்
பஞ்சாயத்து கவுன்சிலர் மற்றும் மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஒன்றியக்
கவுன்சிலர் உள்ளிட்ட பதவியிடங்களுக்கு அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பலர்
மனுதாக்கல் செய்யவில்லை. அவ்வாறு மனுதாக்கல் செய்த பலரும், எதிரணியின்
'கவனிப்புக்காக' காத்துள்ளனர்.இந்நிலைக்கு, இதற்கு முன் இருந்த எம்.எல்.ஏ.,
எம்.பி., ஆகியோர் முக்கிய காரணமாகும்.இவ்வாறு தெரிவித்தனர்.