Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/பாத்திமா பள்ளியில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

பாத்திமா பள்ளியில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

பாத்திமா பள்ளியில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

பாத்திமா பள்ளியில் இலவச ரத்தவகை கண்டறியும் முகாம்

ADDED : ஜூலை 21, 2011 02:32 AM


Google News

ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் பாத்திமா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு இலவச ரத்தவகை கண்டறியும் முகாம், சோழன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பில் நடந்தது.

சங்கத்தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் சிவராஜ், மாவட்ட தலைவர்கள் ரமேஷ், செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர் ராஜன் முகாமை துவக்கி வைத்து பேசியதாவது: ப்ளஸ் 2 படித்து அதிக மதிப்பெண் எடுத்து மெடிக்கல் மற்றும் பொறியியல் படிப்பதற்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைத்து மாணவ, மாணவிகளுக்கு கல்வி கட்டணம் லயன்ஸ் சங்கம் சார்பில் இலவசமாக வழங்கப்படும். பெற்றோர் குழந்தை பிறக்கும்போது ஜாதகம் குறிப்பதற்கு முன் ரத்தவகையையும் கண்டறிந்து வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முகாமில், கே.எஸ்.பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் சரவணன் தலைமை கல்லூரி மாணவிகள் பணிபுரிந்தனர். முருகன் நன்றி கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us