/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லையில் டெட்டனேட்டர் வெடித்து தனியார் கம்பெனி ஊழியர் படுகாயம்நெல்லையில் டெட்டனேட்டர் வெடித்து தனியார் கம்பெனி ஊழியர் படுகாயம்
நெல்லையில் டெட்டனேட்டர் வெடித்து தனியார் கம்பெனி ஊழியர் படுகாயம்
நெல்லையில் டெட்டனேட்டர் வெடித்து தனியார் கம்பெனி ஊழியர் படுகாயம்
நெல்லையில் டெட்டனேட்டர் வெடித்து தனியார் கம்பெனி ஊழியர் படுகாயம்
ADDED : ஆக 11, 2011 02:20 AM
திருநெல்வேலி : நெல்லையில் டெட்டனேட்டர் வெடித்து தனியார் கம்பெனி ஊழியர் படுகாயமடைந்தார்.
நெல்லை ஜங்ஷன் உடையார்பட்டி ரோட்டில் தனியார் மினரல் வாட்டர் கம்பெனி உள்ளது. அந்த கம்பெனியை மகிழ்ச்சி நகரை சேர்ந்த தியாகராஜன் நடத்தி வருகிறார். நெல்லை டவுன் நயினார்குளம் பகுதியை சேர்ந்த சண்முகசுந்தரம் மகன் முத்துசாமி(19) அங்கு பணியாற்றி வருகிறார். இவர் நேற்று கம்பெனியில் பணியில் இருந்த போது பலத்த சத்தத்துடன் ஒரு பொருள் வெடித்தது. முத்துசாமியின் இடதுகை சிதைத்து விரல்கள் துண்டுதுண்டாக சிதறின. அக்கம்பக்கத்தினர் அவரை பாளை. ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூ, துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ, தாசில்தார் அபுல்காசிம், உதவி கமிஷனர் ஸ்டாலின், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்தில் வெடிகுண்டு சோதனைப்பிரிவு போலீசார், தடய அறிவியல் அலுவலர்கள் ஆய்வு நடத்தினர். சிதறிக்கிடந்த முத்துசாமியின் விரல் துண்டுகளை போலீசார் கைப்பற்றினர். கம்பெனி உரிமையாளர் தியாகராஜன், காவலர் இசக்கியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். படுகாயமடைந்த முத்துசாமி கூறும்போது, ''காலையில் பணிக்கு வந்தேன். புழுக்கமாக இருந்ததால் ஊதுபத்தி கொளுத்தி ஒரு இரும்புக்கம்பி மீது வைத்தேன். அப்போது கம்பி வெடித்தது'' என்றார். சம்பவ இடத்தில் மேலும் வெடிக்கும் பொருட்கள் உள்ளதா என போலீசார் தீவிர சோதனை நடத்தினர். தச்சநல்லூர் போலீசில் முன்பு பதிவு செய்யப்பட்ட பி.சி.ஆர்., வழக்கில் முத்துசாமி ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடித்தது டெட்டனேட்டர் : போலீஸ் கமிஷனர் வரதராஜூ கூறும்போது, ''வெடித்தது டெட்டனேட்டர். முத்துசாமி ஒரு கையில் டெட்டனேட்டரை பிடித்துக்கொண்டு மற்றொரு கையால் பற்ற வைத்த போது வெடித்துள்ளது. டெட்டனேட்டரை ரோட்டில் இருந்து எடுத்து வந்ததாக அவன் கூறுகிறான். ரோட்டில் இருந்து டெட்டனேட்டர் கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை. முத்துசாமிக்கு டெட்டனேட்டர் கிடைத்தது எப்படி, இதில் வேறு யாருக்கு தொடர்புள்ளது என விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். சம்பவ இடத்தில் வேறு டெட்டனேட்டர்கள், வெடிக்கும் பொருட்கள் கைப்பற்றப்படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.