/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/கோவில்பட்டியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைதுகோவில்பட்டியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைது
கோவில்பட்டியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைது
ADDED : ஜூலை 12, 2011 12:26 AM
கோவில்பட்டி : கோவில்பட்டியில் அனுமதியின்றி மதுவிற்றவர் கைதானார்.
மேலும் 13 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டது.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது, கோவில்பட்டியில் கிழக்கு போலீசார் ரோந்து சுற்றி வந்தபோது சந்தேகப்படும்படியாக ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவரை பிடித்து விசாரணை நடத்திய போது அவர் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் அவர் கோவில்பட்டி சரமாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்த குருசாமி மகன் சீனிவாசன்(35) என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து 13 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமலிங்கம் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்து கோவில்பட்டி ஜேஎம்1 கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்.