/உள்ளூர் செய்திகள்/திருவாரூர்/இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டணும் நபார்டு வங்கி அதிகாரி வேண்டுகோள்இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டணும் நபார்டு வங்கி அதிகாரி வேண்டுகோள்
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டணும் நபார்டு வங்கி அதிகாரி வேண்டுகோள்
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டணும் நபார்டு வங்கி அதிகாரி வேண்டுகோள்
இயற்கை விவசாயத்தில் ஆர்வம் காட்டணும் நபார்டு வங்கி அதிகாரி வேண்டுகோள்
ADDED : ஜூலை 12, 2011 12:03 AM
திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் இயற்கை விவசாய
பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் நுகர்வோர்களுக்கான விளைபொருட்கள்
குறித்த கருத்தரங்கள் பஞ்சாயத்து தலைவர் முருகதாஸ் தலைமையில் நடந்தது.
திருவாரூர் நபார்டு வங்கி உதவி மேலாளர் ரவிசங்கர் பேசியதாவது: நம்முடைய
முன்னோர்கள் பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கையின் முறையில் சாகுபடி செய்து
கொண்டார்கள். இறத்கு தக்கப்பூண்டு, கொழுஞ்சி, காவாளை போன்ற பசுந்தாள்
உரச்செடிகளை பயிரிட்டு மடக்கி உழுது சாகுபடி செய்தார்கள். நஞ்சில்லாத உணவை
உற்பத்தி செய்து நாட்டு மக்களுக்கு உணவு அளித்து வந்தார்கள். அந்த
நிலையிலிருந்து மாறி ரசாயண உரங்களை பயன்படுத்தி சாகுபடி செய்து வந்÷õதம்.
மீண்டும் இயற்கை விவசாயத்தில் இறங்கி பல்வேறு தொழில்நுட்பங்களுடன்
நஞ்சில்லாத உணவு உற்பத்தி நடந்து வருகிறது. விளைநிலங்கள் எல்லாம் பிற
உபயோகத்துக்கு பயன்படுத்துவதால் நெல் உற்பத்தியை பெருக்க இயற்கை
விவசாயத்தில் விவசாயிகள் ஆர்வம் காட்ட வேண்டும். திருவாரூர் மாவட்டத்தில்
உழவர்கள் மன்றம் மூலம் தேவையான பயிற்சிகள் உழவர்களுக்கு அளிக்கப்பட உள்ளது.
அதனை பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு நபார்டு வங்கி பொதுமேலாளர்
ரவிசங்கர் பேசினார். கடந்த ஐந்தாண்டாக திருவாரூர் நபாடு வங்கி உதவி
பொதுமேலாளராக பணியாற்றி இடமாறுதல் பெற்று வெளிமாநிலம் செல்லும் உதவி
பொதுமேலாளர் ராகவன் சிறப்பாக பணியாற்றியதுக்காக கவுரவிக்கப்பட்டார்.
கிரியேட் பயிற்சி இயக்குனர் ஜெயராமன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய இயற்கை
உழவர் இயக்க அமைப்பாளர் கரிகாலன், நாகை மாவட்ட அமைப்பாளர் சதாசிவம்,
கிரியேட் விதை வங்கி ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், நம்பிக்கை தொண்டு
நிறுவன இயக்குனர் சவுந்தராஜன், சேது கல்வி நிறுவன இயக்குனர் பரந்தாமன்,
தொண்டு நிறுவன ஆலோசகர் ஜான்சன் உட்பட பலர் பங்கேற்றனர். கிரியேட் பயற்சி
உதவியாளர் ராஜசேகரன் நன்றி கூறினார்.