/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஓடும் பஸ்சில் மாணவர் தற்கொலை முயற்சி கடலூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணைஓடும் பஸ்சில் மாணவர் தற்கொலை முயற்சி கடலூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணை
ஓடும் பஸ்சில் மாணவர் தற்கொலை முயற்சி கடலூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணை
ஓடும் பஸ்சில் மாணவர் தற்கொலை முயற்சி கடலூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணை
ஓடும் பஸ்சில் மாணவர் தற்கொலை முயற்சி கடலூரில் பரபரப்பு: போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 11, 2011 11:09 PM
கடலூர் : காதல் தோல்வியால் மனமுடைந்த ஐ.டி.ஐ., மாணவர் ஓடும் பஸ்சில் விஷம் குடித்து மயங்கி விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் குணசீலன்(21). இவர் கடலூர் பீச்ரோட்டில் உள்ள தனியார் ஐ.டி.ஐ.,யில் எலக்டீரிக்கல் படித்து வருகிறார். இவர் கல்லூரி மாணவியை காதலித்து வந்துள்ளார். ஆனால், அந்த மாணவி இவரை காதலிக்கவில்லை. இதனால் மனமுடைந்த குணசீலன், நேற்று காலை வீட்டில் அரளி விதையை அரைத்து குடித்துவிட்டு, ஐ.டி.ஐ.,க்கு செல்வதற்காக கடலூருக்கு தனியார் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். பஸ் நெல்லிக்குப்பம் அருகே வந்தபோது தனது கையில் பிளேடால் கிழித்துக் கொண்டதால் ரத்தம் கொட்டியது. மேலும், அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். அதனைக் கண்டு திடுக்கிட்ட அவரது நண்பர்கள், அதே பஸ்சில் அழைத்து வந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு திவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லிக்குப்பம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.