கூடலூர் : கூடலூர் அருகே பாடந்துரை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ்(18).
இவர்
கூடலூர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் காலை
9 மணிக்கு கூடலூரில் இருந்து, அரசு பஸ்சில் ஏறி கல்லூரிக்கு செல்லும்
போது, துப்புகுட்டி பேட்டையில் பஸ்சின் படியில் இருந்து தவறி விழுந்தார்.
சிகிச்சைக்காக கேரள மாநிலம் பெருந்தல்மன்னா தனியார் மருத்துவமனையில்
சேர்க்கப்பட்டார். சிகிச்சை பலனின்றி நேற்று 3 மணியளவில் இறந்தார்.
கூடலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.