Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/நீரில்லாத குண்டேரிப்பள்ளத்தில் திரியும் யானைகள்

நீரில்லாத குண்டேரிப்பள்ளத்தில் திரியும் யானைகள்

நீரில்லாத குண்டேரிப்பள்ளத்தில் திரியும் யானைகள்

நீரில்லாத குண்டேரிப்பள்ளத்தில் திரியும் யானைகள்

ADDED : ஜூலை 21, 2011 02:27 AM


Google News

கோபிசெட்டிபாளையம் : குண்டேரிப்பள்ளம் அணைக்கு தண்ணீர் தேடி வரும் யானைகள், தண்ணீர் கிடைக்காமல் ஆங்காங்கே திரிவதால், பொது மக்கள் பீதியடைந்துள்ளனர்.

கோபி கொங்கர்பாளையம் பஞ்சாயத்து குன்றி மலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. குன்றி, விளாங்கோம்பை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெய்யும் மழை நீர் குண்டேரிப்பள்ளம் அணையில் தேக்கி வைக்கப்படுகிறது. நடப்பாண்டு ஓரளவுக்கு மழை பெய்ததன் எதிரொலியாக குண்டேரிப்பள்ளத்தில் சென்ற மே மாதம் 39 அடி தண்ணீர் இருப்பு இருந்தது. மே மாதம் அணையின் ஷட்டர் பழுதானதால் தண்ணீர் வீணாகியது. எமர்ஜென்ஸி ஷட்டர் மூலம் தண்ணீர் திறக்கப்பட்டது. பாசனத்துக்கு தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டதன் காரணமாக நடப்பு மாதம் துவக்கத்தில் 26 கன அடியாக நீர்மட்டம் குறைந்தது.

பொதுப்பணித் துறையினரின் அலட்சியப் போக்கால், குண்டேரிப்பள்ளம் அணையின் ஷட்டர் உடைந்து, அணையில் இருந்த 26 அடி தண்ணீரும் வெளியேறியது. தண்ணீர் வெளியேறியது மட்டுமின்றி, அணையில் இருந்து ஐந்து டன் மீன் வரை வெளியேறி செத்து விட்டது. அணை வறண்டு போனது. குண்டேரிப்பள்ளம் அணைப் பகுதிக்கு மேல்புறம் உள்ள மலைப்பகுதியில் யானை, மான் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன. தாகம் தீர்க்க இவை குண்டேரிப்பள்ளத்தை மட்டுமே நம்பியுள்ளன. இரவு நேரத்தில் தண்ணீர் குடிக்க இவை அணைப்பகுதி வருகின்றன. அணை வறண்டு விட்ட நிலையிலும், மோட்டார் பம்ப் செட்டில் இருந்து வெளியேறும் தண்ணீர் அளவுக்கு, அணையின் மேற்பகுதியில் உள்ள ஆற்றில் தண்ணீர் ஓடுகிறது. விளாங்கோம்பை செல்லும் சாலையிலும் தண்ணீர் தேங்கியுள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் வன விலங்குகள் தண்ணீர் குடிக்க போதுமான தண்ணீரின்றி, திண்டாடுகின்றன. இரவு மட்டுமின்றி, பகலிலும் இவை தாகத்துடன் அணையின் மேற்பகுதியில் சுற்றித் திரிகின்றன. குறிப்பாக யானைகளின் கால் தடமும், சாணமும் அணையின் மேற்பகுதியில் நிறைந்து கிடக்கின்றன. வன விலங்குகள் தண்ணீர் குடிக்க வரும் இடத்தின் அருகில், ஆற்றுக்குள், மிகப்பெரிய பள்ளம் தோண்டி தண்ணீரை தேக்கி வைக்கலாம். இதன் மூலம் விலங்குகள் தாகம் தீர்க்க ஓரளவு வாய்ப்பு கிட்டும். வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us