ADDED : ஜூலை 30, 2011 03:05 AM
மதுரை:மதுரை சொக்கிகுளத்தை சேர்ந்த கல்பனா வீட்டை அபகரித்ததாக தி.மு.க.,வை
சேர்ந்த மாஜி வேளாண் விற்பனைக்குழு தலைவர் 'அட்டாக்' பாண்டி மீது, மத்திய
குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
அவர் திருச்சி மத்திய
சிறையில் அடைக்கப்பட்டார். இவ்வழக்கு, மதுரை முதலாவது ஜெ.எம்., கோர்ட்டில்
விசாரணைக்கு வந்தது. பாண்டி ஆஜரானார். விசாரணையை ஆக., 12க்கு
தள்ளிவைத்தும், பாண்டியை போலீஸ் காவலில் செல்ல அனுமதிக்கும் மனு மீதான
விசாரணையை ஆக.,1க்கு தள்ளி வைத்தும் மாஜிஸ்திரேட் முத்துக்குமரன்
உத்தரவிட்டார்.