/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சேரங்கோடு சாலையில் மக்கள் மறியல் : இரு மாநில போக்குவரத்து 2 மணிநேரம் கடும் பாதிப்புசேரங்கோடு சாலையில் மக்கள் மறியல் : இரு மாநில போக்குவரத்து 2 மணிநேரம் கடும் பாதிப்பு
சேரங்கோடு சாலையில் மக்கள் மறியல் : இரு மாநில போக்குவரத்து 2 மணிநேரம் கடும் பாதிப்பு
சேரங்கோடு சாலையில் மக்கள் மறியல் : இரு மாநில போக்குவரத்து 2 மணிநேரம் கடும் பாதிப்பு
சேரங்கோடு சாலையில் மக்கள் மறியல் : இரு மாநில போக்குவரத்து 2 மணிநேரம் கடும் பாதிப்பு
பந்தலூர் : பந்தலூர் அருகே சேரங்கோடு பகுதியில் நேற்று காலை நடந்த மறியல் போராட்டத்தில் தமிழக - கேரள இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.பந்தலூர் அருகே கொளப்பள்ளி டான்டீ சரக எண் 4ல் நிரந்தர தொழிலாளியாக இருந்தவர் பாபு.
இதனையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு கொளப்பள்ளி, சேரம்பாடி, சேரங்கோடு டான்டீ கோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள், ஊர் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் பந்தலூர் - கோழிக்கோடு சாலையில் சேரங்கோடு பஜார் பகுதியில் திடீர் மறியலில் ஈடுபட்டனர்.அங்கு வந்த தேவாலா டி.எஸ்.பி., சுரேஷ்குமார், கூடலூர் வன அலுவலர் தீபக் பில்ஜி, பந்தலூர் தாசில்தார் பாபு, டான்டீ கோட்ட மேலாளர் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் மோகன், வி.ஏ.ஓ., தனராஜ் ஆகியோர், சி.ஐ.டி.யு., பொது செயலாளர் சுரேஷ், கவுன்சிலர்கள் ராமானுஜம், அந்தோணி, அசோக்குமார், பா.ம.க., நிர்வாகி திருச்செல்வம், தி.மு.க., நிர்வாகி வேலாயுதம் ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.'யானை தாக்கி உயிரிழந்த பாபுவின் குடும்பத்தினருக்கு முதற்கட்டமாக 25 ஆயிரம் ரூபாய், தொடர்ந்து 2.75 லட்சம் ரூபாய் வழங்கவும், முதல்வர் நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் ரூபாய் வழங்கவும் பரிந்துரைப்பது; நோய்வாய்பட்ட அல்லது விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை டான்டீ நிர்வாகம் சொந்த செலவில் வாகன வசதி ஏற்படுத்தி தருவது; குடியிருப்பு பகுதிகளுக்கு யானைகள் வராமல் தடுக்க அகழி அமைப்பது; தொழிலாளர்களுக்கு இழப்பீட்டு தொகை வழங்க டான்டீ நிர்வாகம் சார்பில் பரிந்துரைப்பது என உறுதி அளிக்கப்பட்டது. இதனையடுத்து பகல் 12.30 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது. இதனால், தமிழக - கேரள இடையே 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.