Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/"ராகிங்'கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை அண்ணா பல்கலை எச்சரிக்கை

"ராகிங்'கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை அண்ணா பல்கலை எச்சரிக்கை

"ராகிங்'கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை அண்ணா பல்கலை எச்சரிக்கை

"ராகிங்'கில் ஈடுபட்டால் 2 ஆண்டு சிறை அண்ணா பல்கலை எச்சரிக்கை

ADDED : ஆக 09, 2011 02:20 AM


Google News

சென்னை : 'மாணவர்கள் ராகிங்கில் ஈடுபட்டால், இரண்டு ஆண்டு சிறை தண்டனையுடன், இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்' என, சென்னை அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது.கல்லூரிகளில் நடக்கும் ராகிங் சம்பவங்களால், மாணவியர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

ராகிங் காரணமாக, மாணவியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் தமிழகத்தில் நடந்துள்ளன. மாணவர் சேர்க்கை முடிந்து கல்லூரிகள் துவங்கியுள்ள நிலையில், ராகிங்கை தடுக்கும் வகையில், பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.சென்னை அண்ணா பல்கலை வளாகத்தில், பல்வேறு விழிப்புணர்வு வாசகங்களை தாங்கிய, 'மொபைல் வேன்' ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த வேன், நேற்று பல்கலை வளாகத்தில் சுற்றி, சுற்றி வந்தது. கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா தொழில்நுட்ப கல்லூரி மற்றும் கட்டட கலைக் கல்லூரி ஆகிய மூன்று கல்லூரிப் பகுதிகளில், இந்த வேன் சுற்றி வந்து, மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியது. வேனில், ராகிங்கில் ஈடுபட்டால் என்னென்ன தண்டனைகள் கிடைக்கும் என்ற விவரங்கள் எழுதப்பட்டுள்ளன. ராகிங்கில் ஈடுபடும் மாணவர்களுக்கு இரண்டாண்டு சிறை தண்டனைகள் கண்டிப்பாக கிடைக்கும்.



கல்லூரியில் இருந்து நீக்கப்படுவதுடன், இரண்டரை லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.மேலும், வேறு எந்த கல்லூரியிலும் சேர முடியாதபடி, நடவடிக்கை எடுக்கப்படும்.ராகிங் நடந்தால், உடனடியாக கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் சேகர் மொபைல்போனில் புகார் தெரிவிக்கலாம். அவரது மொபைல்போன் நெம்பர்: 99406-66725.இவ்வாறு, வேனில் வாசகங்கள் எழுதப்பட்டுள்ளன. மேலும், கல்லூரி வளாகங்களில் ஆங்காங்கே புகார் பெட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன. இதுவரை எந்தவித புகாரும் வரவில்லை என, பல்கலை வட்டாரங்கள் தெரிவித்தன.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us