
பத்திரிகையாளர்கள் எங்கே...?தேனியில் மாவட்ட விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், ஆரூண் எம்.பி., தலைமையில் நடந்தது.
இதைப் பார்த்த எம்.பி., 'சரி இருக்கட்டும்... கூட்டம் முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிக் கொள்கிறேன்...' என்றார்.கூட்டம் முடிந்ததும், 'பத்திரிகையாளர்கள் எங்கே...?' என்று தேடினார். ஆனால், பத்திரிகையாளர்கள் அதற்கு முன்பே நடையை கட்டி விட்டனர். யாரும் இல்லாததால், யாரிடம் போய் சொல்வது என்று தெரியாமல் இடத்தை காலி செய்தார்.ரூ. 4,000 மிச்சம்...!கடலூர் மாவட்டம், பண்ருட்டி பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், சந்தேகத்தின் பேரில் நின்றிருந்த ஒரு பெண்ணை டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரித்தார்.
அந்த பெண்ணிடம் ஏழு பர்ஸ்கள் மற்றும் 4,000 ரூபாய் பணமும் இருந்ததை வைத்து, ஜேப்படியில் ஈடுபட்ட பெண் தான் என்று முடிவு செய்து வழக்கு தொடர தயாராகிக் கொண்டிருந்தனர். அந்தப் பெண்ணை போலீஸ் மூலம் சோதனை செய்து விட்டு, ஒரு மூலையில் உட்கார வைத்தனர்.ஆனால், சிறிது நேரத்தில் போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு அந்தப் பெண், 'எஸ்கேப்' ஆனார். பதட்டமான போலீசார், சிறிது நேரத்தில் இயல்பு நிலைக்கு திரும்பியதும், 'நல்லவேளை வழக்கு பதிவு செய்யவில்லை... இல்லேன்னா நம்ம பாடு திண்டாட்டம் ஆகியிருக்கும்... கெட்டதிலும் ஒரு நல்லது நடந்திருக்கு... அந்தப் பெண் வைத்திருந்த 4,000 ரூபாய் மிச்சம்...' என, பங்கு பிரிப்பதில் இறங்கினர் போலீசார்.