/உள்ளூர் செய்திகள்/கடலூர்/கம்மியம்பேட்டை பாலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் அணைகம்மியம்பேட்டை பாலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் அணை
கம்மியம்பேட்டை பாலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் அணை
கம்மியம்பேட்டை பாலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் அணை
கம்மியம்பேட்டை பாலத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் அணை
ADDED : ஆக 22, 2011 10:05 PM
கடலூர் : கடலூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றில் 40 லட்சம் ரூபாய் மதிப்பில் நீர் திருப்பு அணை கட்டும் பணி நடந்து வருகிறது.
திருவந்திபுரத்தில் இருந்து அண்ணாபாலம் வரை கெடிலம் ஆற்றங்கரையில் மழைக் காலங்களில் உடைப்பு ஏற்படுவதால் கரையோரமாக உள்ள குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் புகுந்து விடுகிறது. அதனைத் தடுக்கும் விதமாக ஆற்றங்கரைகள் பலப்படுத்தும் பணி கடலூர் பொதுப்பணித் துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்படுகிறது. மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது நீரின் வேகத்தால் ஆற்றங்கரையோர வளைவு பகுதிகளில் உள்ள கரைகள் சேதமடையும். இதன் காரணமாக குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் புகுந்து விடும். வளைவு பகுதிகளில் உள்ள கரைகளை பாதுகாக்க கம்மியம்பேட்டை பாலத்தில் இருந்து கிழக்கு பகுதியில் 100 மீ., தூரத்திற்கு கருங்கற்களை கொட்டி நீர் திருப்பு அணை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணி 40 லட்சம் ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


