/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/வ.உ.சி., பார்க்கில் அத்துமீறும் ஜோடிகள்வ.உ.சி., பார்க்கில் அத்துமீறும் ஜோடிகள்
வ.உ.சி., பார்க்கில் அத்துமீறும் ஜோடிகள்
வ.உ.சி., பார்க்கில் அத்துமீறும் ஜோடிகள்
வ.உ.சி., பார்க்கில் அத்துமீறும் ஜோடிகள்
ADDED : செப் 19, 2011 01:19 AM
ஈரோடு: ஈரோட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், வ.உ.சி., பார்க்
மாவீரஆஞ்சநேயர் கோவிலும் ஒன்று.
அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில்
செயல்படுகிறது. அதிகப்படியான பக்தர்கள் வந்துசெல்வதால், கடந்த சில
நாட்களுக்கு முன் கோவிலில் அன்னதான திட்டம் துவங்கப்பட்டது. இயற்கையான
சூழ்நிலையில், குகை கோவிலை போல அமைதியாக காட்சியளிக்கிறது.செவ்வாய்,
சனிக்கிழமை, மூலநட்சத்திரம், கிருத்திகை, புரட்டாசி மற்றும் பெருமாளுக்கு
உகந்த நாட்களில், ஆஞ்சநேயரை வழிபட மக்கள் குடும்பத்துடன்
வந்துசெல்கின்றனர். கோவிலின் அருகில், வ.உ.சி., பூங்கா, அறிவியல் பூங்கா,
அருங்காட்சியகம் ஆகியன அமைந்துள்ளது. குடும்பத்துடன் வருகின்றவர்கள்,
கோவிலையும், மற்ற இடங்களையும் சுற்றிப்பார்த்து செல்கின்றனர்.பூங்காவை
சுற்றிப்பார்க்க வரும் இளைஞர்கள் மற்றும் காதல் ஜோடிகள், பூங்காவினுள்
கோவில் கருவறையை ஒட்டிய, படிக்கட்டில் அமர்ந்து, அத்துமீறிய செயல்களில்
ஈடுபடுகின்றனர். கோவில் சுற்றில் வரும் பக்தர்கள் இந்த காட்சிகளை பார்க்க
நேரிடுகிறது.கோவில் நிர்வாகம், பூங்கா நிர்வாகம், போலீஸாரும் இவற்றை கண்டு
கொள்வதில்லை. கோவிலுக்கு குடும்பத்துடன் வரும் பெண்கள் முகம் சுழிக்கும்
நிலைக்கு ஆளாகின்றனர்.