/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/வேடசந்தூர் மகளிர் பள்ளிக்கு விரைவில் விமோசனம்வேடசந்தூர் மகளிர் பள்ளிக்கு விரைவில் விமோசனம்
வேடசந்தூர் மகளிர் பள்ளிக்கு விரைவில் விமோசனம்
வேடசந்தூர் மகளிர் பள்ளிக்கு விரைவில் விமோசனம்
வேடசந்தூர் மகளிர் பள்ளிக்கு விரைவில் விமோசனம்
வேடசந்தூர் : இடநெருக்கடியில் தவிக்கும் வேடசந்தூர் அரசு மகளிர் பள்ளிக்கு மாற்று இடம் ஒதுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
தூர்து போன வீரணன் குளத்தில், பள்ளிக்கு இடம் ஒதுக்குவது குறித்து பரிசீலிக்கப்பட்டது. இதனால் குளத்தில் உள்ள ஆக்கிரமிப்புக்களை அகற்ற உத்தரவிட்டார். எம்.எல்.ஏ., - ஆர்.டி.ஓ., வேலுச்சாமி, பிற்பட்டோர் நல அலுவலர் முகமது ஐதர் அலி, முதன்மை கல்வி அதிகாரி அசோகன், தாசில்தார் மலைச்சாமி உடன் இருந்தனர்.
ஆக்கிரமித்த நிலம் மீட்பு: வேடசந்தூரில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்காக, அரசுக்கு சொந்தமான வீரணன்குளம் இடத்தை கலெக்டர் ஆய்வு செய்தார். எல்லைகளை சரிபார்த்தபோது அருகில், அரசு சொந்தமான நிலம் 30 சென்ட் இடத்தை ராமலிங்க நகர் என்ற பெயரில் வீட்டுமனைகள் விற்பனை செய்வதற்காக ஆக்கிரமித்தது தெரிந்தது. இந்த இடத்தின் மதிப்பு 50 லட்ச ரூபாய். ஆக்கிரமிப்பு நிலத்தை உடனடியாக அகற்ற தாசில்தார் மலைச்சாமிக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.