/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/சாக்கு கொள்முதல் ஏலம் சோரம் போன அ.தி.மு.க.,சாக்கு கொள்முதல் ஏலம் சோரம் போன அ.தி.மு.க.,
சாக்கு கொள்முதல் ஏலம் சோரம் போன அ.தி.மு.க.,
சாக்கு கொள்முதல் ஏலம் சோரம் போன அ.தி.மு.க.,
சாக்கு கொள்முதல் ஏலம் சோரம் போன அ.தி.மு.க.,
ADDED : ஆக 01, 2011 11:12 PM
சின்னாளபட்டி : சின்னாளபட்டியில் அ.தி.மு.க., வினரை புறக்கணித்து, தி.மு.க., வினருக்கு வருவாய் தரக்கூடிய வகையில் ஆளுங்கட்சி நிர்வாகிகள் செயல்படுவதாக, தொண்டர்கள் புலம்புகின்றனர்.
இங்கு ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும், இரண்டு கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வதிலும், பழைய சாக்குகள் விற்பனையிலும் முறைகேடுகள் நிலவுகின்றன. கடந்த ஆட்சியில் தி.மு.க., வினர் இருவர் ஆதிக்கம் செலுத்தி, முறைகேடுகள் வெளிச்சத்திற்கு வராத வகையில் செயல்பட்டனர். ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், பழைய சாக்குகளை விலைக்கு வாங்கும் உரிமை, அ.தி.மு.க., ஒன்றிய நிர்வாகி ஒருவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர் நேரடியாக இத்தொழிலில் ஈடுபடாமல், தி.மு.க., வினருக்கே 'சப் கான்ட்ராக்ட்' விட்டுள்ளார். இந்த வாய்ப்பை எதிர்பார்த்த அ.தி.மு.க., தொண்டர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இதுகுறித்து ஆளுங்கட்சி தலைமைக்கு புகார் சென்றுள்ளது. ஆத்தூர் ஒன்றிய செயலாளர் பி.கே.டி.நடராஜன் கூறுகையில், ''ஜெ., பேரவை நிர்வாகி ஒருவருக்கு, பழைய சாக்கு கொள்முதல் உரிமை வழங்கப்பட்டது. அவர் தி.மு.க., வினருக்கு 'சப் கான்ட்ராக்ட்' விட்டது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.