/உள்ளூர் செய்திகள்/தூத்துக்குடி/திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
ADDED : ஆக 01, 2011 02:27 AM
தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகர திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.தூத்துக்குடி புதிய மாநகராட்சி எல்லைக்குட்பட்ட திமுக., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு மாநகர அவைத்தலைவர் சுசீ ரவீந்திரன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், மாநகரச் செயலாளர் ஆனந்தசேகரன், ஒன்றிய செயலாளர் மாடசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் பெரியசாமி உட்பட பலர் பேசினர். கூட்டத்தில் மாவட்ட அணிச்செயலாளர்கள் ராஜ்மோகன் செல்வின், திருச்சிற்றம்பலம், உள்ளாட்சி மன்ற தலைவர்கள் கருணாகரன், பார்வதி, ஆறுமுகம் மற்றும் நகர கழக நிர்வாகிகள், கிளைக்கழக செயலாளர்கள், பிரதிநிதிகள், சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், புதிதாக பொறுப்பேற்ற அரசு திமுகவினர் மீது பொய் வழக்குகள் போட்டு வருவதை கண்டிப்பது, அரசை கண்டித்து கலெக்டர் ஆபிஸ் முன்பு நடைபெறும் அறப்போர் ஆர்பாட்டத்தில் தூத்துக்குடி மாநகர் கழகம் சார்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொள்வது, தூத்துக்குடி மாநகராட்சிக்கு புதிதாக வகுக்கப்பட்ட எல்லை வரையறையின்படி 5 பஞ்சாயத்துக்களை உள்ளடக்கி தேர்தல் நடைபெற இருப்பதால் மீண்டும் மாநகராட்சியை திமுக., கைப்பற்றும் விதத்தில் செயல்பட வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.